உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

47

கனியால் பெற்ற பேறா அது? கனிவால் பெற்ற பேறா? தான் வாழக் கருதாமல் தண்டமிழ் வாழவாழும் தனியுயர் ஒளவை வாழ்தலே தமிழ் வாழ்வெனக் கருதிய தமிழ் வழங்கிய வாழ்த்தே அது.

‘ஒழிக' என்பதும் வாய்தான்.

‘வாழ்க' என்பதும் வாய்தான்.

வாய்க்கு மணம் தருவது எது?

ஒழிகவா? வாழ்கவா?

மணம் தருவதைச் சொல்க! சொல்ல முடிய வில்லையா? மணம் தாராததைச் சொல்லாமலேனும் விடுக!

அடியாமல் விட்டுவிட்டால், தானே படுத்து விடும் பந்து!

டால்,தானே

ஆட்டாமல் விட்டுவிட்டால், தானே நின்று விடும் ஊசல்! நேரில் காண்பதை நிகழ்த்திக் காட்டுவதுதானே முறைமை! முதியர் இளையரை வாழ்த்துவதா?

இளையர் முதியரை வாழ்த்துவதா?

இளையர் முதியரை வணங்குவதும், முதியர் இளையரை வாழ்த்துவதும் வழக்கம். அதற்காக இளையர் முதியரை வாழ்த்துதல் கூடாது எனின் முறையன்றாம்.

உலகுக்கு மூலமாம் ஒன்றை வாழ்த்துகிறோம். அதற்கு 'இறைவாழ்த்து' என்பது பெயர், நாம் வாழ அதனை வாழ்த்துகிறோம். அதுபோல் பெருமக்களும் நல்லோரும் வாழ்த்தப் பெறுதலால் பெருமையும் நன்மையும் வாழ்த்துப் பெற்று, வாழ்த்துவார் தமக்கே நலம் செய்வதாம்.

பன்னீரை இறைத்தால் இறைப்பவனுக்கு மணவாதா?

வாழ்த்துக்கு அடிப்படை உள்ளார்ந்த அன்பு. அவ்வன்பு உடையோர் எவரையும் வாழ்த்தலாம். வாழ்த்துக்கு முதுமை இளமை இல்லை! உள்ள முதிர்வே முதிர்வு! நெஞ்ச நெருக்கமே நிறைவு!

வாழ்த்துவதன் நோக்கம் எதையும் எதிர் நோக்குதல் தமக்காக எதிர்நோக்குதல் - அன்று. ‘அது கிடைக்கும்’ ‘இது

-