உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

கிடைக்கும்' என எதிர்பார்த்து வாழ்த்தும் வாழ்த்து வாணிக வாழ்த்து. வாய் வாழ்த்து, வாய்மை வாழ்த்துமாவது வருபயன் கருதாமை யாலேயே!

வாழ்த்தின் நோக்கு பலபல அல்ல! ஒன்றே! அதுவாழ்த்துதல் என்னும் ஒன்றே!

கையசைவே

வாழ்த்தா?

வாயசைவே

கண்ணசைவே வாழ்த்தா? எதுவானால் என்ன?

வாழ்த்தா?

வாழ்த்துவார் நெஞ்சம் வாழ்த்தப் பெறுவார் நெஞ்சுக்கு நிறைவு செய்வதாய் அமைய வேண்டும்! அதுவே வாழ்த்து!

மணிக்கணக்காகவாழ்த்தும் வாழ்த்தில் உண்டாகும் உள்ள ருக்கத்தினும், மணித்துளிப் பொழுது வாழ்த்தும் வாழ்த்திலே உருக்கமிக்கு இருப்பது இல்லையா? அதனினும் கண்மணி அசையும் ஓரசை விலே உண்மை உருக்கம் வெளிப்பட்டு விடுவது இல்லையா? வாழ்த்தின் மதிப்பீட்டுக்கு நெஞ்சத்து அளவேயன்றி வேறு அளவு இன்று!

தோ, ஒரு வாழ்த்து நெடுங்காலத்திற்கு முற்பட்ட வாழ்த்து. ஆனால் காலத்தை வென்று இன்றும் பசுமையாக விளங்கும் வாழ்த்து.

வாழ்த்துபவன் முடியுடைய வேந்தன்.

வாழ்த்துப் பெறுபவன் அவன் குடிபடைகளுள் ஒருவன். வாழ்த்துபவன் போரேர் உழவன்.

வாழ்த்துப் பெறுபவன் சீரேர் உழவன்.

வாழ்த்துபவன் மதிலும் கோட்டையும் மாடமும் கூடமும் மலிந்த மாநகராளி.

வாழ்த்துப் பெறுபவன் வயலும் சோலையும் தோட்டமும் துரவும் சூழ்ந்த சிறுகுடியாளி.

இத்துணை வேறுபாடுகள் இருப்பினும் நெஞ்சார்ந்த வாழ்த்துப் பிறக்கிறது.

நெஞ்சுக்கு வேண்டுவது உண்மை. அதனைக் கண்ட டத்தில் நெஞ்சு, கொஞ்சி விளையாடுவதும் உண்மை!