உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

வியந்த தாமோதரர் உரைநடையில் இருக்கும் கடுமை, செய்யுள் நடையில் இல்லாமல் எளிமையாய் இருத்தலைக் கண்டார். தூயதும் கடியதுமாம் உரைநடையில் ஒருநூல் பரிதியார் படைத்துத்தரின் நன்றாம் என எண்ணினார். அதனால் நுமது தமிழ் நடையைக் கண்டு வியந்த எமக்கு நீர் அதே உயரிய நடையில் இயன்ற ஒரு நூல் எழுதித்தர இயலுமாயின் அவ்வாறு எழுத வேண்டுகிறேன் என்றார். அது கேட்ட பரிதியார், "ஆகா! அவ்வாறே செய்வேம்! நுமக்கு வேண்டியவாறே உயர்தனிச் செம்மொழி நடையிலேயே இயன்ற உரைநடைநூல் ஒன்று இயற்றித் தருவல்" என்றார்.

தாமோதரர்

விரும்பியவாறு விரும்பிய நடையில் 'மதிவாணன்' என்னும் புனைகதையை எழுதினார் பரிதியார். அது 1897-ஆம் ஆண்டு முதல் ஞானபோதினி' என்னும் மாதிகையில் பகுதி பகுதியாக வெளிவந்தது. 1902-ஆம் ஆண்டில் அது நூலுருக் கொண்டது. அப்போது தாமோதரர் உலக வாழ்வை நீத்து விட்டார். அவர் வாழ்ந்த காலத்திலேயே முடிந்து நூல் வடிவு பெறாமைக்குப் பரிதியார் மிக வருந்தினார். "காலஞ் சென்ற இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களது வேண்டுகோளின்படி வகுக்கப்பட்ட இந்நூல் அன்னார் இருந்த காலத்திலேயே முற்றுப் பெறாது போனமைபற்றிப் பெரிதும் மனமுளைகின்றேம்" என 'மதிவாணன்' முகவுரையில் வரைந்தார் பரிதியார் (16-5-1902).

தாமோதரர் பிரிவாற்றாது கையறு நிலை பாடியோருள் பரிதியாரும் ஒருவர். அதில் தரவு கொச்சகம் ஒன்று; அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம் மூன்று. தரவு கொச்சகப்பாடல்:

“காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போல் நாமோது செந்தமிழில் நன்னூல் பல தொகுத்த தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடையார் தண்டமிழ்ச் செந்நாப்புலவீர்"