உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

கிண்ணிமடம்

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

அரசப்பர் உழவுத் தொழில் புரிந்ததே அன்றிக் கிண்ணிமடம் என்னும் மடத்தின் அறப்பொறுப்பாளராகவும் இருந்துவந்தார். இப் பொறுப்பு அவர்தம் பரம்பரை வழியே இறங்கி வந்தது.

"கிண்ணிமடம்' அருளானந்த அடிகள் என்னும் அறத் துறவியாரால் தோற்றுவிக்கப் பெற்றது ஆகும். அருளானந்த அடிகள் நெடுங்காலம் இருந்து அறப்பணிகள் ஆற்றித் தாம் தோற்றுவித்த மடத்திலே அடக்கமும் ஆனார். அடிகள் பிறந்தவூர் "கிண்ணிமங்கலம் ஆகும். அக் “கிண்ணிமங்கலம்" மடமே கிண்ணிமடம் ஆயிற்று. கிண்ணிமடப் பொறுப்பு செண்பகம் பிள்ளை வீட்டாருக்கு உரிமையாக இருந்துவந்தது. அவ்வுரிமை அரசப்பருக்கும் உரிய பொழுதில் வந்து சேர்ந்தது. குறைவற அறப்பணிகள் புரிந்துவந்தார் அரசப்பர்.