உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மாணவர் சண்முகனார்

அழகர்சாமி தேசிகரிடம் தொடக்கக் கல்வி

சோழவந்தானில் கல்மண்டபம் என்னும் இடத்தே தொடக்கப் பள்ளி ஒன்று நடைபெற்று வந்தது. அப்பள்ளியின் பொறுப்பாளரும் தலைமையாசிரியருமாக அழகர் சாமிதேசிகர் என்பவர் இருந்தார். அவர் சிவகங்கையைச் சேர்ந்தவர். வேங்கடசாமி என்பவர் தம்புதல்வர்; சோழ வந்தானையே தம் ஊராக்கிக் கொண்டு வாழ்ந்தார். அவர் தொடக்கப் பள்ளி ஆசிரியரே எனினும் பேராசிரியர் என்னுந் தகுதிக்கு உரியவர். பண்டைக் காலத்தில் இளம் பாலாசிரியர், பாலாசிரியர்? என்று இருந்தோரும் பேராசிரியராகவும், பெரும் பேராசிரியராகவும் இருந்தவர்களே. இத்தகையோர் வழிவந்த தேசிகரிடத்துச் சண்முகனார் ஐந்தாம் அகவையில் ஒப்படைக்கப் பெற்றார்.

தேசிகர் பேரறிஞர்; அரசப்பர் நற்குணச் செம்மல்; சண்முகம் கூர்த்த மதியும் அடங்கிய பண்பும் உடையவர். இவர்கள் கூட்டுறவு சிறந்தோங்கியது போலவே கல்வியும் சிறந்தோங்கியது. ஐந்தாம் அகவை முதல் பன்னிரண்டாம் அகவை முடிய ஏழாண்டுகள் தேசிகரிடம் சண்முகம் பயின்றார்.

நூலறிவும் நுண்ணறிவும்

அக்காலத்தே சண்முகம் கற்றுக்கொண்ட நூல்களை நினைத்துப்பார்க்கவே தலை சுற்றும்! 'அம்மாவோ' என்று கூறும்! அத்துணை நூல்களைப் பாடங் கேட்டார்; மனனம் செய்தார். அரிச்சுவடி, கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம் இவற்றைத் தெளியக் கற்றார். நீதிநூல்களாம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, உலகநீதி, நன்னெறி, நல்வழி, அறநெறிச்சாரம், நீதிநெறி விளக்கம், நாலடியார், திருக்குறள் ஆகியவற்றைப் பாடங்கேட்டு, வரப்பண்ணினார். இவ்வளவும் எட்டு ஒன்பதாம் அகவைக்

1. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன் அகம். 102, 348, நற்றிணை, 273 2. மதுரைப் பாலாசிரியர் நப்பாலத்தனார்; அகம் 172; மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் அகம், 92.