உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

குள்ளாகவே! பத்தாம் அகவையில் கலசையந்தாதி, மருதூரந்தாதி, புகலூர் அந்தாதி, திருவரங்கத்தந்தாதி முதலாய அந்தாதிகளும், மாலைகளும், உலாக்களும் கற்றார். பதினொன்றாம் அகவையில் மதுரைக் கலம்பகம், வெங்கைக் கலம்பகம், காசிக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம் முதலாம் கலம்பக நூல்களும், திருக் கோவையார் முதலாம் கோவை நூல்களும் கற்றுத்தெளிந்தார். பன்னிரண்டாம் அகவையில் பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு, கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, ஆசிரிய நிகண்டு முதலாம் நிகண்டுகளை வரப்பண்ணினார். இவற்றுடன் கீழ்க்கணக்கு நூல்களிலும் கருத்துச் செலுத்தினார். நாளும் தமிழால் வளரும் சண்முகம் நன்னிலை கண்டு ஆசிரியரும், பெற்றோரும் அகமிக மகிழ்ந்து பாராட்டினர். "இவனைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாள்கொல்' என்று ஊர் உரைக்க உளத்தாலும், மொழித் திறத்தாலும் வளர்ந்தார் சண்முகனார்.

66

இந்நிலைமையிலே அரசப்பர்நல்லுள்ளத்தில் ஒரு சிறுகவலை இருந்து வந்தது. அது, தம் பொறுப்பிலே இருந்துவரும் கிண்ணி மடம் பசித்துவந்தோருக்குச் சோறும் நீரும் தந்துவரும் அளவுடன் நில்லாது அறிவுத் தொண்டும் செய்ய வேண்டும் என்பதாகும். “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், இன்னறுங் கனிச் சோலைகள் செய்தல் ஆகிய அனைத்தினும் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" அன்றோ' தலையாய அறம்? உடலுக்கு உண்டி உதவும் மடம், உயிருக்கு உறுதுணையாம் கல்விப் பணியும் ஏற்றுக் கொண்டால் எவ்வளவு சிறக்கும்? என்றெல்லாம் எண்ணினார்.

அரசப்பர் நற்றொண்டு

அறிவுப் பணிக்குத் தக்கவர் வேண்டு மன்றோ! அதற்காக எங்கெங்கோ தேடியலைந்தார். கசடறக் கற்று, கற்ற வழியிலே நின்று, தன்னை அடுத்து வந்தோருக்குத் தகவுற வழிகாட்டிச் செல்லும் ஒருவரால் அல்லவா அறிவுப்பணி புரிய முடியும்! இந்த ஆவலால்தான் தேடியலைந்தார். அதுவும் வீண்பட்டு விடவில்லை. தம் இல்லக்கிழத்தியார் பிறந்த பனையூருக்கு ஒருமுறை சென்றி ருக்கும் போது, அவ்வூர் மடத்தில் இருந்த செந்தமிழ்த் துறவியார் சிவப்பிரகாசர் என்பவரைக் கண்டு கனிவுறப் பேசிக் களிப் படைந்தார். அவர்தம் புலமை நலத்தாலும், பண்பு முதிர்வாலும் ஈர்க்கப் பெற்றார் அரசப்பர். "இவர் கிண்ணி மடத்திற்கு

1.பாரதியார், வெள்ளைத் தாமரை, 9.