உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம

3. கவிஞர் சண்முகனார்

சண்முகனார்க்குத் தட்டுத்தடையின்றிக் கவியியற்றும் திறமை பதினான்காம் அகவையிலேயே வாய்த்துவிட்டது. எதுகைக்கு எண்ணித் திரியாமலும், மோனைக்கு முட்டுப்படா மலும் பாடினார். சொற்கள் தாமாகவே வலிய ஓடி ஓடி வந்து சேர்ந்தன. பொருளும் யாப்பும் அணியும் போட்டி போட்டுக் கொண்டுவந்தன. அரிதில் பொருள் காணும் மடக்கும் திரிபும் எளிதில் இவர்க்கு வயப்பட்டன. அந்நாதியும் மாலையும் தடையின்றி வெளிவந்தன. முன்னர்ப் பாடம் செய்து வைத்திருந்த பாடல்களைத் திரும்பக் கூறுவது போன்று புதிய கவிதைகளை இயற்றுவது இவர்க் கியல்பாயிற்று. இவற்றை நன்கறிந்தசிவப்பிரகாசர், பெரிதும்பாராட்டிப் பேருவகை கொண்டார். தம்மை நாடிவந்து கற்க விரும்பினோர்க்குச் சண்முகனாரைக் கற்பிக்குமாறு செய்தார். சண்முகனார் அடிகளிடத்து மாணவராக இருந்து கொண்டு அவரிடத்து வந்த மாணவர்க்கு ஆசிரியராகவும் துலங்கினார்.அரசப்பர் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.” தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட" ஈன்ற தாயாம் பார்வதியம்மையின் மகிழ்ச்சியை எப்படிக் கூறுவது? அவரே அறிவார்!

கல்மண்டபம் பிள்ளையார் கோயிலில் தானே எழுத்தறிவு பெற்றார் சண்முகனார். அதனை மறவாமல் முதன்முதலாகக் கல்மண்டபச் சிதம்பரவிநாயகர் மேல்சிதம்பர விநாயகர் மாலை பாடினார். அதன் பின்னர்த் திருவடிப் பத்துப் பாடினார். இவற்றை இயற்றுங்காலையில் சண்முகனாகர்க்கு வயது ஈரேழே! அம்மம்ம! "இயற்கைக் கொடை" என்பது அன்றி, இதனை என்னவென்று சொல்வது?

ஆசிரியரும் மாணவரும்

பதினைந்தாம் அகவை நடக்குங்கால், கொச்சகப்பா' என்னும் ஒரு வகைப் பாவினை யாத்தார். அப் பாவகையிலும் தம் திறத்தைக் காட்டினார். 'அகரத்தில் பாடல் தொடங்கினார். அப்படியே ஒள காரம் முடியவுள்ள பன்னீருயிர்களுக்கும்