உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

9

ஒவ்வொரு பாடல் பாடினார். பின் 'க'கரம் தொடங்கி 'ன'கரம் இறுதியாம் பதினெட்டு எழுத்துகளையும் முதலாகக் கொண்டு பாடல்கள் பாடினார். "உயிரும் உடம்பும் ஆம் முப்பதும் முதலே என்றும் முப்பது எழுத்துகளும் முறையாய் வர, பொருள் திறம் செறியப் பாடி முடித்தார். அடிகள் உள்ளம் உவகையால் விம்மியது; வாய் 'தளதள'த்தது; மயிர்க் கூச்செறிந்தது; உவகைக் கண்ணீர் பெருகியது. "சண்முகம் வாழ்க" "கவிப்புலவர் வாழ்க" என்று தம்மை மறந்து வாழ்த்தினார். ணையற்ற கவிஞ பெருமான் சண்முகம் இவ்விடத்து மாணவன்” என்னும் நினைவு துறவியாம் அடிகளையும் தூக்கி நிறுத்திப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அகங்குழையத் தழுவிக்கொண்டு தமிழன்பைக் காட்டினார் அடிகள்.

ர்

அடிகளிடத்துத்தான் சண்முகனார்க்கு எத்தகைய பற்று! ஐயோ! அப்பற்றினைச் சண்முகனாரே குறிக்கின்றார்.

“மடங்கொண்ட சிந்தை மயல்கொண்ட போதே மறைந்தகல இடங்கொண்ட ஞான ஒளிகொண்ட ஆசான் எவர்க்கு மனம் அடங்கொண் டளிக்கல்வி நூல்மழை பெய்தங் கறிவுறுத்துந் தடங்கொண்டல் நங்கந்தசாமி முனிவர்...

""

கந்தசாமியாம் முனிவர் யார்? அவரே சிவப்பிரகாசர். முதற் பெயர் அது; துறவுப் பெயரே சிவப்பிரகாசர். "ஞானஒளி கொண்ட ஆசான்! கல்வி மழை பொழியுந் தடங்கொண்டல்!" சாக்ரடீசிற்கு ஒரு பிளேட்டோவும், இராமகிருட்டிணருக்கு ஒரு விவேகானந்தரும் கிடைத்தனர். அடிகளுக்காக ஓர் அரசஞ் சண்முகனார் பிறந்திருந்தார். அடிகள் உண்மையில் பேறு பெற்றவரே!

3

உள்ளத்துரத்தை உலகுக்கு வெளிப்படுத்துமாறும், உண்மைத் திறத்தை அறிவிக்குமாறும் இயற்கை இடை இடையே சோதனைகள் நிகழ்த்துவது உண்டு. "உச்சி மீது வானிடந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று முழங்கி முட்டறுப்போரே, இடும்பைக்கு இடும்பை படுத்து ஏற்றங் காண்பர். அல்லாதார், அவதிக்கு ஆட்பட்டுத் தந்திறங்கெட்டுத் தளர்வர். இச் சோதனை வாழ்க்கைப் படிப்புக்கு இயற்கை நடத்தும் தேர்வு எனின் மெய்ம்மையேயாம். இச் சோதனைக்குச் சண்முகனார் விலக்காக முடியுமா?

1.நன்னூல்,59.

2. பாரதியார், அச்சமில்லை, 2,

3. திருக்குறள், 623.