உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆசிரியர் சண்முகனார்

சண்முகனாரின் எளிமைத் தோற்றம் முதற்கண் மாணவர் களைக் கவர்ந்து விடவில்லை. மெலிந்த உருவினராய் எளிய உடையினராய்க் குடுமித் தலையினராய்த் தோன்றிய அவர், "பகட்டுடையினர்" இடையே பாராட்டப் பெறுவது அரிதுதான். ஆனால் அவர் பாடம் நடத்திய திறனும் புலமையும் மாணவர் களைக் கவர்ந்தன.

வை துணை

ஒரு பாடலை எடுத்துக் கொண்டால் அப்பாடலுக்குப் பொருள்கூறும் அளவுடன் சண்முகனார் நிற்க மாட்டார். வழக்கிடையில் உள்ள உரை இன்னது எனக்கூறி அதற்கு இப்பொருள் காணில் சிறக்கும் என்று காட்டி, அப்பொருளே கூறப்படின் வரும் இழுக்கு இது என்று நிறுவி, தாங்கொண்ட பொருளுக்கு ஆன்றோர்கள் மொழி இவை புரிகின்றன என்று சான்று காட்டி, வகுப்பினை ஆராய்ச்சி மன்றம் ஆக்கி விடுவார். மாணவர்கள் மெய்மறந்து போய் இவர்தம் புலமைதான் என்னே! எப்படித்தான் இவ்வளவு பாடல்களையும் வரப்பண்ணிக் கொண்டார்? இப்பாடலுக்கு இத்தனை விதமாய்ப் பொருள் கூறுவது அம்மம்ம! அரிது!" என்று தங்களுக்குள் பேசி மகிழ்வர்.ஆசிரியர் பாடம் சொல்லுந்திறமும் நுண்ணறிவும் தந்தை போன்று அமைந்து மாணவர்களை அன்புற நடத்திய தகைமையும் சண்முகனாரை மாணவர்கள் மதிக்குமாறு செய்ததுபோலவே தமிழையும் மதிக்குமாறு வைத்தது.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலே சண்முகனார் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1890 ஆம் ஆண்டு முதல் 1902 ஆம் ஆண்டு முடிய அங்கே அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டுகள் அளப்பரியன. அவை தமிழுலகில் அவருக்குத் தனியிடத்தைத் தந்தன.

நவமணிக் காரிகை நிகண்டு

தேசிகர் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சண்முகனார் நிகண்டு நூல்கள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தார்