உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

று

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

அல்லவா! அப்பயிற்சியைப் பயன்படுத்தி நலம் விளைக்கும் செயல் ஒன்று செய்து முடிக்க விரும்பினார். அதன்படியே சொல்லையும் பொருளையும் ஒன்பது பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையிலே பாடி முடித்தார். ஒன்பது இயல்களைக் கொண்டதாகவும் நிகண்டடெனும் அமைதி உடையதாகவும் செய்யப்பட்டது. ஆதலால் நவமணிக் காரிகை நிகண்டு என்னும் பெயர் சூட்டினார். இந்நூல் புலவர் கூடிய அவையிலே சிவப்பிரகாச அடிகளின் சீர்சால் தலைமையிலே 1898ஆம் ஆண்டு சிறப்புற அரங்கேற்றம் செய்யப்பட்டது.

நூலாராய்ச்சியும் புத்துரையும்

தொல்காப்பியத்தின்மீதும், திருக்குறளின்மீதும் தணியாத பற்றும், பேராராய்ச்சியும் சண்முகனார்க்குண்டு. இவ்விரண்டையும் தமிழ்மொழியின் இருகண்களாகக் கருதினார். எப்பொழுதும் நூல்களை மேற்போக்காகப் படிப்பது இவர்க்கு இயல்பு அன்று. பொதுநிலையே இவ்வாறாகத் தொல்காப்பியம் திருக்குறளைப் பொறுத்த அளவிலே எழுத்தெழுத்தாக எண்ணிப் பார்த்துப் படித்தவர் என்று கூறலாம். நூலையே அன்றி உரையையும் தெளிய ஆய்ந்தார். அவ்வாராய்ச்சி தமிழுக்குச் சிறப்புத் தருவது ஆயிற்று. நூலாசிரியர் கருத்தினை எண்ணிப் பார்க்காமல் உரையாசிரியர்கள் பல இடங்களில் வலிந்து உரை கூறியிருந்தமை புலனாயிற்று. ஏடெழுதுவோர்களால் பாடல்களில் சில தவறுகள் ஏற்பட்டுள்ள மையும் தெளிவாயிற்று. ஆனால், அரும்பெரும் ஆசிரியர்கள் கூறிய உரைகளை எளிதில் குறைகூறிவிட முடியுமா? அவ்வாறு கூறினால் புலமை உலகம்பொறுத்துக் கொண்டிருக்குமா? இதனால் மேலும் மேலும் ஆராய்ந்தார். தாம் ஆராய்ந்த விதத்தையும் காரணத்தையும் அவரே குறிப்பிடுகின்றார்.

"தொல்காப்பியத்தின் பெருமையும், சில் காப்பியமும் முற்றத் தேரா என் அறிவின் சிறுமையும் தம்முள் ஒப்பு நோக்கி உரைப்புழி அண்டமும் அணுவுமாம் எனினும் சாலாமை கண்டேன் ஆயினும் அவாவின் பெருக்கால் அந் நூலும்அதன் உரையும் புன்னூலும் ஆராய்வான் புக்குச் சிற்சில் இடத்து முன் உரைகள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமையின் தொன்னூல் துணிபு இதுவோ அதுவோ எனவும், பிறிது ஒன்றே எனவும் ஐயுற்றும் பன்னூலு முறைப்படப் பல்லாற்றான் நாடி என் அறிவிற்கு எட்டிய அளவின் அவற்றுள் சில துணிந்தும் எழுதினேன்."