உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

15

இவ்வாறு பெரிதின் ஆய்ந்து அரிதின் எழுதிமுடித்தார் ஒரு நூல். அதன் பெயர் நுண் பொருட் கோவை என்பதாம்.

நுண்பொருட்கோவை வரன்முறையாய்த் தொல்காப்பிய இலக்கணத்தையுரைக்கும் நூலன்று. ஆசிரியர் கருத்துக்கு மாறுபட்டு உரையாசிரியர்கள் செல்லும் இடங்களைமட்டும் சுட்டிக் காட்டி, அவ்வுரை பொருந்தாமைக்குரிய காரணங்களை விரித்துச் செல்லுவது ஆயிற்று. ஆனால் சண்முகனார் மேலும் மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியின் பயனால் உரையாசிரியர்களும் நன்னூல் முதலாம் பின்னூல் ஆசிரியர்களும் வழுவிச் சென்ற டங்கள் வரம்பிலவாக விருத்தல் புலனாயிற்று. அதனால்இனி வழுவின்னது வழுவில்லது இன்னது, காரணம் இன்னது என்று சுட்டிக்காட்டிச் செல்வதினும் தொல்காப்பிய நூல் முழுமைக்குமே உரைகாணல் ஒன்றே தக்கது என்னும் முடிவுக்கு வந்து' புத்துரை காண விரும்பினார்.

தொல்காப்பியம் போலவே திருக்குறளும் இவரைக் கவர்வதாயிற்று. திருக்குறளுக்குப் பதின்மரும் அவர்க்குமேல் பலரும் உரைகண்டிருக்கின்றனர். இருந்தும் ஆசிரியர் கருத்துடன் இணைந்ததாகப் பலபடல்களின் உரைகள் இல்லாமை கண்டு சண்முகனார் வருந்தினார். சிலபாடல்களின் சொற்களும், அதிகாரத் தலைப்புகளும் தவறாகக் குறிக்கப் பெற்றிருப்பதையும் கண்டார். தொல்காப்பியம்போலவே திருக்குறளுக்கும் புத்துரை இயற்றல் தங்கடன் என்று கருத்தில் இருத்தினார்.

உரைகாணும் உணர்ச்சி உந்தித் தள்ள மேலும் மேலும் ஆராய்ச்சியில் ஆழ்ந்தார்.ஆழ்ந்து கண்டெடுத்த முத்துக்களை ஆன்றோர் முன்வைத்து அவர்தம் கருத்துகளை அறிவதற்கு ஆவலுற்றார். வரைமொழியில் வருமுன்னர் வாய்மொழியில் வெளியிட விரும்பினார். மதுரையிலும், மற்றுள்ள சில இடங் களிலும் தம் கருத்துகளை எடுத்துரைத்தார். உண்மை காணும் எண்ணமுடைய சிலர் உவகைகொண்டு பாராட்டினர்; ஊக்க வுரைகள் பல உரைத்தனர். ஆனால், பொறாமையும், தன்னலமும் சிறு மதியும் கொண்டசிலர், "முன்னோர் மொழிகளை மாற்றி யுரைக்க இவருக்கு என்னே துணிவு?" என்று வெறுத்தனர்.

1. செந்தமிழ்: தொகுதி,/பகுதி,1

"சோழவந்தான் அ. சண்முகம் பிள்ளை

சேதுபதி செந்தமிழ்க் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதன்'

2. தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதலாவது பகுதியாகிய பாயிர விருத்தி வெளிவந்த ஆண்டு கி.பி. 1905.