உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

வேண்டியவாறு நேரிடையாகவும், மறைமுகமாகவும் பழித்தனர். பழிமொழி கேட்டுப் பதைத்தாரல்லர் சண்முகனார். அவர்தம் மெல்லிய உள்ளத்தில் வன்மையே வலுத்தது. தம் உரைக்கு மறுப்புரை நிகழ்த்துவோர் பொறாமை வயப்பட்டுப் புகல்கின்றவரே அன்றி முறைகண்டு அறத்துடன் கூறுவோரல்லர் என்பதைத் தெள்ளிதின் உணர்ந்தார். தம் கருத்துக்கள் நிறுவுவதற்கு ஏற்ற கருத்துகளை மேலும்மேலும் சேர்த்தார். என்ன எதிர்ப்புக் கிளைத்தாலும் 'புத்துரை' எழுதிவிட உறுதிகொண்டார்.

துன்பத்தின்மேல் துன்பம்

இச்சமயத்தே சண்முகனாரை இருவகை இடர்கள் அரித்துத் துன்புறுத்தின. ஒன்று, வழக்கமாகப் போய்விட்ட வறுமை; மற்றொன்று, உடலை வாட்டித் துன்புறுத்தும்பிணி. இவ்விரண்டின் ஒருமுகத் தாக்குதலுக்கும் ஆட்பட்ட சண்முகனார் உயர்நிலைப் பள்ளியினின்று ஓய்வுகொள்ள நேரிட்டது. மாதங்களாகவும், ஆண்டுகளாகவும் பன்முறை விடுமுறை கொண்டார். இச்சமயங் களிளெல்லாம் ஏற்பட்ட துயரினை அளவிட்டுரைத்தல் அரிது. எனினும் துன்பத்தின் இடையேயும் இன்பங்கொண்டார். இடும் பைக்கும் இடும்பை ஆக்கி உரத்துடன் நின்றார். வறுமைத்துன்பமும் வாட்டும் பிணித்துன்பமும் கவி இன்பத்தாலும், நூலாய்வு இன்பத்தாலும் மாற்றப்பெற்றன. இந்நிலையிலே எழுந்தது இன்னிசை இருநூறு என்னும் அருமையான அறநூல்.

புலமையாளர்களை மதித்து நடப்பதில் சண்முகனார்க்கு நிகரான ஒருவரைக் காண்பது அரிது. ஆனால், போலிப்புலமைக்குத் தலைவணங்க மறுப்பதும் அவர்க்கு இயல்பு. தாம் எழுதி முடித்த நூல்களைத் தாம் மதித்தற்குரிய புலமையாளர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் கருத்தினையும் அறிவார். தவறோ மாறுபாடோ இருக்குமாயின் எடுத்துக்காட்டித் திருத்துமாறு வேண்டுவார். இத்தகைய உயர்பண்பு சண்முகனார்போலும் பெரும் புலமை யாளர்களுக்கு வாய்ப்பதென்பது அருமையினும் அருமையே. இவரை அணிசெய்த குணங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று எனல் வெளிப்படை.

இன்னிசை இருநறு

சண்முகனார் தாம் எழுதிமுடித்த இன்னிசை இருநூறு என்னும் நூலின் கையெழுத்துப் படியினைத் தென்மொழிக்கலைச் செல்வர், பெரும் பேராசிரியர், முனைவர், தமிழ்த்தாத்தா என்னும் தகவுகள் படைத்த உ.வே. சாமிநாதையர் அவர்கட்கு அனுப்பி