உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையடிகள்

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

இக்காலையில், தனித் தமிழ் இயக்கப் பெருந்தலைவராம் மறைமலையடிகளிடத்துச் சண்முகனார்க்குப் பேரன்பு உண்டா யிற்று. அப் பேரன்பு வளர்மதிபோல் வளர்ந்து நிறைமதியாய்த் திகழ்வதும் ஆயிற்று. இத்தகு பற்றினை ஊக்கியது அடிகளார் ஆராய்ச்சி வன்மையேயாகும். பத்துப் பாட்டாதி பழம்பெரு நூல்களுக்கு உரையாசிரியர்கள், நூல் ஆசிரியர் கருத்திற்கு மாறான உரைகளையும் கூறியுள்ளனர் என்று தெளிவுறக் கண்டார். அதனைப் பேச்சாலும் எழுத்தாலும் தமிழுலகில் பரப்பிக் கொண்டுவந்தார். அவர் செயலும், அம்முறையும் சண்முகனார் செய்கைகளுக்கு ஊக்கமும் உறுதித் துணையும் தருவனவாக இருந்தன.

அடிகளார் 1901 ஆம் ஆண்டிலே சண்முகனார்க்குத் தாம்

இயற்றிய 'மும்மணிக் கோவை' 'நெஞ்சறிவுறூஉ' ஆகிய நூல் களையும், 'ஞான சாகர இதழ்' ஒன்றையும் அனுப்பிவைத்திருந்தார். அவற்றைக் கண்ணுற்ற சண்முகனார், “தாம் அன்பு கூர்ந்து விடுத்த தமது நூல்களும், ஞானசாகரத்து நான்காவது இதழும் பெற்று உள்ளுதொறுள்ள முருகித் தமது தரிசனம் எஞ்ஞான் றெய்துங் கொலோ வென வரம்பிகந்த அவாவின்கண் அமிழ்கின்றேன். அகல் வானத்து உம்பர் உறைவார் பதியினும் இன்பமிக்கெய்துதற் கேதுவான சான்றோர் நட்பையே பெரும் பொருளெனக் கருதும் அடியேற்குத் தமது கருணையால்மற்றைப் புலவரது மாண்புற்ற நண்பும் வாய்க்குமேல் அது சிந்தாமணித் தெண்கடல் அமிர்தந்தில்லையான் அருளால் வந்தால் அதனை ஒக்கும்" என்று நன்றியுரை எழுதினார்.

"இங்ஙன நூலியற்றல் சங்கம் இருந்து தமிழாராய்ந்தார்க்கும், பின்னுள்ளோர்களில் கல்லாட நூலார்,"ஞானாமிர்த நூலார், கச்சியப்ப முனிவர், குமரகுருபரர், முதலிய சிலர்க்கும் தமக்குமே அன்றி ஏனையோர்க்கு எவ்வாற்றானும் அரிது அரிது என்பது அழுக்குற்ற நெஞ்சத் தரல்லாத நட்டார் பகைவர் நொதுமலர் என்னும் முத்திறத்தாரும் ஒத்துக் கோடற் பாலதாம்" என்று புலமை மாண்பு பாராட்டினார்.

அடிகளாரும், "நம் உண்மை நண்பர் சண்முகம்பிள்ளை” என்றும், நண்பரவர்கள் நற்குண மாட்சியினையும் ஒருமைப் பாட்டினையும் மிக வியந்து அவர்கள்மாட்டு எழுபிறப்பும் திரியா உழுவல் உரிமை அன்பு பாராட்டுங் கடப்பாடுடையயேன்"