உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

19

என்றும் தம் உள்ளன்பு உடைமையைத் தெள்ளிதில் காட்டுவார். சான்றோர் சான்றோர் பாலராப" என்னும் நன்மொழிக்குச் சான்றாய் இலகினர் சண்முகனாரும், மறைமலையடிகளாரும்.

தமிழ்க் கல்லூரித் தோற்றம்

சண்முகனார் தமிழ்ப் பெரியார் பலருடன் பழகும் பேறு பெற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தே மற்றுமோர் அரிய வாய்ப்பும் கிட்டுவது ஆயிற்று. பைந்தமிழ்ப் புலவரும் பெரும் புரவலருமான பாலவனத்தம் அரசர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் முயற்சியாலும், சேதுவேந்தர் உதவியாலும் மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் ஒன்று, 1901 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 14ஆம் நாள் தொடங்கப் பெற்றது? அச்சங்கத்திற்குத் தமிழ் நாட்டிலுள்ள அரும் பெரும் புலவர்கள் அனைவரும் வந்திருந்து பங்கு கொண்டனர். நம் புலவர் சண்முகனாரும் சீரிய பங்கு

கொண்டார்.

தமிழ்ப் புலவர்களை உருவாக்குவதற்காகச் "சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை” என்னும் பெயரால் கலாசாலை ஒன்று உருவாகியது. அரிய பெரிய தமிழ்நூல்களை வெளியிடும் முயற்சிக்கு அச்சகம் ஒன்று நிறுவப்பெற்றது. பல்லாயிரக் கணக்கில் நூல்களும் ஏட்டுச் சுவடிகளும் சேர்த்து நூலகம் ஒன்று ஆக்கப் பெற்றது. தமிழ் ஆராய்ச்சிக் கருத்துகளை வெளியிடுமாறு "செந்தமிழ்" என்னும் பெயரால் திங்களிதழ் ஒன்று தொடங்குவது என்று உறுதிசெய்யப் பெற்றது. இவ்வளவும் சண்முகனார்க்குப் பேரின்பம் பயப்பதாயின.

சங்கத் தொடக்க விழாவுக்குத் தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் புலவர் பெருமக்கள் வந்திருந்தார்கள். அவர்களுள், திருமயிலையிலிருந்து வந்தவரான சண்முகம் பிள்ளை என்பவரும் ஒருவர். நம் சண்முகனார் பெயரும் சண்முகம் பிள்ளை தானே! அதனால், சண்முகம் பிள்ளை என்னும் பெயர் பலருக்கு மயக்கத்தை எழுப்பலாயிற்று. இருவரும் புலமைத் துறையில் ஈடுபட்டவர்கள். ஆதலின் ஒருவரின் வேறு கண்டறியுமாறு பெயரில் தெளிவு இருத்தல் வேண்டும் என்னும் எண்ணம் சண்முகனார்க்கு ஏற்பட்டது. அதனால் அப்பொழுதே

1. புறநானூறு, 218.

2. செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1.