உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தம் தந்தை அரசப்ப பிள்ளையின் பெயர்ச் சுருக்கமாக 'அரசன்' என்பதைத் தம் பெயருடன் சேர்த்துக் கொண்டார். சண்முகனார், அரசஞ் சண்முகனார் ஆனார். அதுகாலையில் இவருக்கு வயது முப்பத்து நான்கு.

சங்கப் பேரவையில் சண்முகனாரும் பேசினார். "அரசஞ் சண்முகன்” என்று பெயர் கொண்டிருக்கிறான்! என்ன இறுமாப்பு? "என்று பொறாமை வயப்பட்டுப் புழுங்கினோரும், பொருந்தும், இவர் தமிழுக்கும் அரசர் என்னத் தக்கவரே" என்று ஒப்பித் தம் அறியாமைக்காக வருந்திக் கொண்டனர். சிலரோ, தம் கொள்கையை மாற்றிக் கொள்ளாது விடாப்பிடியாக இருந்தனர்.

புலவர் சண்முகனார் “அரசன் சண்முகன்" என்று வைத்துக் கொள்ளாது, "அரசஞ் சண்முகன், என்று அமைத்துக் கொண்டது ஏன், என்னும் ஐயம் எழக் கூடும். புணர்கூட்டுண்ட சங்கப் புலவர் பெருமக்கள் பெயர்களை எண்ணிப் பார்க்குங்கால் இவ்வையம் கிளைத்தெழக் காரணம் இல்லையாய் ஒழியும். தொல்காப்பியமாதி நூல்களைத் துருவி யாராய்ந்த சண்முகனாரோ, தம் பெயரினைக் காரணமின்றி வழங்குவார்? பிறர் தந்த பெயரும் அன்றே! இவரே அன்றோ ஆக்கிக் கொண்டார்!

'அரசன் சண்முகன்' எனின் அரசனான சண்முகன் என இரு பெயரொட்டாய் அமையும். அரசஞ் சண்முகன் எனின் அரசனுக்கு மகனாம் சண்முகன் என்று ஆகும். இதனைப் பழம் புலவர்களாம் கொற்றஞ் சாத்தன், கீரஞ்சாத்தன், காப்பியஞ் சேந்தன், அந்துவஞ் செள்ளையார், கீரங்கீரனார், கொற்றங் கொற்றனார், கொற்றங்கீரனார், சேந்தங் கொற்றனார், தாயங் கண்ணனார், சல்லியங் குமரனார், சேந்தங் கண்ணனார், மருதங் கிழார், சேந்தம் பூதன் ஆகியோர் பெயர்களை நோக்கின் தெளிவாகும். இன்னார் மகன் இன்னார் என்பதை இப்பெயர்கள் காட்டி நிற்றல் வெளிப்படை.

சண்முகனாரைத் தமிழகம் அரசஞ் சண்முகன் என அழைத்தது. ஆனால் சோழவந்தான் வட்டாரத்தினர்க்குச் சோதிடம் சண்முகம் பிள்ளையாகவே இருந்தார். அரசனா னாலும் தாய்க்குப் பிள்ளைதானே!

தமிழ்ச் சங்கம் புதிதாகத் தோன்றியதும் புலவர் குழாத்துடன் நெருங்கிப் பழகுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததும், சண்முகானர்க்குப் பேரின்பம் பயப்பதாயின. எனினும் அவ்வின்பம் முளைத்து வந்த பொழுதிலேயே, துன்பமொன்றும் கிளைத்து வந்தது. "துன்புள தெனின் அன்றோ சுகமுளது?'