உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

உயர்நிலைப் பள்ளி வேலையை விட்டு விலகுதல்

21

சண்முகனார் பணிபுரிந்து வந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் தமிழுக்குரிய பெருமை தர மனமற்றவராய் இருந்து வந்தார். அவர் மனநிலை அவர் உரையாலும் செயலாலும் வெளிப்பட்டது. அயல் மொழிக்குத் தரக்கூடிய வாய்ப்பில் ஒரு பங்கேனும் தாய்த் தமிழுக்குத் தர ஒப்பாத தலைமையாசிரியர் நிலைமைக்காக வருந்தினார். இந் நிலைமையிலே அதற்கு முன் தமிழ்ப் பாடத்திற்கு ஒதுக்கியிருந்த நேரத்தையும் குறைத்து விட்டார். இயற்கையாகவே துன்புற்ற நிைைலமையிலே இருந்த சண்முகனாரைத் துடிதுடிக்கச் செய்தது இந்நிகழ்ச்சி. தலைமையா சிரியரிடம் சென்று, "தாங்கள் செய்த செயல் தவறானது" என்று இடித்துக் காட்டினார். அவர் முறையுடன் பதிலளிப்பதாகத் தெரியவில்லை. இவருக்கு அவர் தம் உரையும் செயலும் ஒத்து வரவில்லை. முடிவு என்ன? தானே வந்த வேலையைத் தாமே உதறி விட்டு வெளியேறினார்.

சென்னைக்குச் செல்லுதல்

சோழவந்தானில் சில திங்கள் தங்கியிருந்தார் சண்முகனார். அக்காலத்தே சென்னைக்கு ஒருமுறை சென்றார். அப்பொழுது தவத்திரு. மறைமலையடிகளார் இல்லத்தில் சின்னாள்கள் தங்கியிருந்து செவிச்சுவையும், அவிச் சுவையும் மாந்தினார். அடிகளாரும் சண்முகனாருடன் அளவளாவிப் பழகியும் உரையாடியும் இன்புற்றார். அடிகளாரைச் சண்முகனார் மைத்துனராகக் கொண்டார். அவர்தம் குழந்தையார் நீலா என்னும் நீலாம்பிகையைத் தம் தோளில் சுமந்து இன்புற்றார். "வண்டமிழ்ப் புலவர்களோடு பழகும் இன்பத்தினும் வானுலக இன்பம் சீரியதாயின் அதனையும் பார்த்து வருவோம்” என்று மொழிந்த பழம் புலவர் மெய்யுரையைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார்.

சண்முகனார் சால்பு

ஒருநாள் சண்முகனாரை அடிகளார் தாம் பணி புரிந்து வந்த கிறித்தவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். சண்முகனாருக்கு அக்கல்லூரியிலே வேலை வாங்கித் தரவேண்டும் என்னும் ஆவல் அடிகளாருக்கு உண்டாயிற்று. அதனால் தம் மாணவர் முன்னிலையில் சண்முகனாரை அழைத்துச் சென்று அவர்தம் கல்விமாண்பினை எடுத்துரைத்தார். தாம் சண்முகனாரிடத்துத்