உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

25

"முன்னரேயுள்ள நோய்முற்றி வயிற்றினுள் நாபியின் கீழ்க் கழலையொப்பத்திரண்டு இரு மலமும் வெளிப் படாவண்ணம் தடுத்து ஆவி போக்க முயன்றது. அக்காலைப் பல சுதேச மருத்துவரிடத்தும் பல ஆங்கில மருத்துவரிடத்தும் சென்று பிணிதீர்த்துக் காத்தல் வேண்டுமெனப் பெரிதும் வேண்டினேன். அவரெல்லாரும் அந்நோய், கருவி கொண்டு சேதிக்கற் பாற்று என்றும் அதுவும் முற்றிய படியால்இனிச் செய்யின் உயிர்க்கேடு செய்யும் என்றும் சொல்லினர். பின்னர்ப் பிறநாடு சென்றாயினும் பிணி தீர்ப்பான் கருதி, யான் அக்காலைச் சேதுபதி கலா சாலையில் கற்பிக்கும் தொழில் பெற்றிருந் தமையால், மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் தலைவரும் பாலவனத்தம் அரசரும், உத்தம குணமேருவும், வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை எனக் கொண்ட பெருவள்ளலு மாகிய உயர்திரு. பாண்டித்துரைத்தேவர் அவர்களைக் கண்டு நடந்தன உரைத்தேன். உடனே அவர்கள் கலாசாலையில் யாம் பெற்று வந்த ஊதியத்தை ஓராண்டுவரை வேலையின்றிப் பெறுமாறு ஆணை செய்து அளித்ததூஉம் அன்றி இருநூறு வெண் பொற்காசும் பரிசிலாக அளித்தார்கள். அவர்கள் செய்த பேருதவியை யான் என்றும் மறவேன்."

மாறு

"பின்னர்ப் புதுக்கோட்டை மருங்குள்ள ஆலங்குடி சென்று சுதேச மருத்துவ நண்பர் ஒருவரிடத்து மருந்துண்டு வருகாலை நோய் தணியாது பின்னும் பெருகி ஆவி அகத்ததோ புறத்ததோ என்று ஐயுறு கிடத்திய அளவில், அதன் முன்னர் ஒருகாலத்தும் யான் கண்டுங் கேட்டும் அறியாத வரும் ஆங்கில வைத்திய கலா நிபுணரும் இன்றும் ஆலங்குடியில் புதுக்கோட்டைத் தமிழ் நாட்டரசரது வைத்திய சாலையில் உத்தியோகம் பெற்றிருப்பவரும் இரக்கமே ஓருருக்கொண்டால் அனையாருமாகிய உயர்திரு. வேணு கோபாலநாயுடு அவர்கள் யான் படும் பாட்டைத் தாமே கேள்வியுற்று யான் அழையாதே என் மருங்கெய்திப் பன்மருந்துதவிச் சிற்சில உபாயத்தால் சின்னாளில் நடையுறச் செய்து நோயளவு தெரிந்து, 'இந்நோய் என்னால் போக்கப் படுவது அன்றாகலின் தஞ்சை மாவட்ட மருத்துவர் லெப்டி னென்ட் கர்னல், எச்.எம். அக்கீம் ஐ.எம் எஃச். துரையவர்கள் சமூகத்தில்