உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தெரிவித்து அவர்களால்குணமுறுக' என வற்புறுத்திச் செலவிற்காக ஐம்பது வெண் பொற்காசும் பரிசி லளித்துத் தஞ்சையிலுய்த்தார்கள். அவர்கள் செய்யா மற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிதன்றோ!'

"பின்னர்த் தஞ்சை சென்று ஆங்கில வைத்திய கலா நிபுணர்களாகிய உயர்திரு. மல்லன்சு அவர்கள், உயர்திரு. முத்துசாமிநாடார் அவர்கள் இவ்விருவர் சகாயத்தால் அத்துரையவர்களைக் கண்டு என்பரிவு சொல்லி வேண்டக் கருணையங்கடலாகிய அத்துரையவர்கள் உடனே பிணிதீர்ப்பான் உறுதி கூறி அவ்வாறே மும்மதிக் கொருகால் மூன்று முறை கருவி கொண்டு சேதித்து அந்நோய் முற்றத் தீர்த்து என்னுயிரை எனக்கே பரிசிலாக அளித்துப் பேருதவி புரிந்தார்கள். அவர்களால் அன்றோ நீங்கு நிலையிலிருந்த என்னுடல் இன்றும் உளதாயிற்று. இப்போதுள்ள உடலை நோக்கின் தந்தையும் தாயும் ஆயினார், அத்துரையவர்களே.

முப்பதைந்தாம் வயது நிரம்பு முன்னரே சண்முகனார் பட்ட முந்திய அவலங்கள் இவை! சண்முகனார்பெற்றிருந்த பேரறிவு நோக்கி வியப்பதா? அவர் பட்டழுந்திய அல்லல்களை எண்ணித் துயருறுவதா? நாள்தோறும் உயிரை அணு அணுவாகப் போக்கிக் கொண்டிருந்த கொடுமைக் கிடையிலும் உலக நலங் கருதிப் புத்துரை கண்டெழுதிய உதவிச் செயலை நினைத்து வாழ்த்துவதா?

நூல் வெளியீடு

சண்முகனார் தொல்காப்பியத்திற்கு விருத்தியுரை எழுதிக் கொண்டுவருவதை அரிமளநகரில் வாழ்ந்த தவத்திரு. சிவானந்த சற்குருநாத சுவாமிகள் என்பார் அறிந்து, சண்முகனாரை அழைத்து விரைவில் உரையை வெளியிடுமாறு வேண்டிக் கொண்டார். ஆனால் நம் சண்முகனாரோ, நூல்முழுமையும் எழுதிமுடித்து அதன் பின்னரே வெளியிடுமாறு கருதியிருந்தார். சுவாமிகளோ யாக்கை இளமை முதலாயின நிலையின்மையின் எழுத எழுத ஓரோர் இயலாக வெளியிடலே தக்கது" என்று வற்புறுத்தி உரையை அச்சிட்டு முடிக்குமாறும் கட்டளை யிட்டார். 'இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு' என்னும் ஏக்கத்திலே நலிவுடன் நாளைக்