உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

27

கழித்துக் கொண்டு வரும் சண்முகனார் நூல்வெளியிட யாது செய்வார்?

சுவாமிகளே உரைநூல் வெளியிடுவதற்குரிய அளவில் பொருள் கிடைக்குமாறு செய்தற்குச் சிந்தித்தார்கள். அரிமள நகர வணிகப் பெருமக்களை அழைத்து மனமுவந்து நன்கொடை வழங்குமாறு கோரினார்.சுவாமிகளின் கட்டளையை ஏற்ற வணிகப் பெருமக்கள் 861 வெண்பொற் காசுகள் உவந்தளித்துச் சண்முகனார் பணியினையும் வாழ்த்தி அனுப்பிவைத்தனர்.

தாம் அதுகாறும் எழுதி முடித்திருந்த பகுதிகளை வெளியிடுமாறு கருதி குரோதி வருடம் தைமாதம் (1905 சனவரி தஞ்சைக்குச் சென்றார்; அச்சிடும் வேலையும் தொடங்கினார்.

குக்

வேலை தொடங்கிய சின்னாட்களில்சண்முகனார்க் காய்ச்சல்கண்டது. உணவு நின்றது; படுக்கையாகி விட்டார். பின் என்ன! அச்சிடும்பணியும் படுத்துக் கொண்டது.

சண்முகனார் நண்பரும் அறிஞரும் வள்ளலுமான அரித்து வார மங்கலம் இரகுநாத ராசாளியாரவர்கள் சண்முகனாரைத் தம் ஊருக்கு அழைத்துச் சென்று பெருந்தகை கொண்டு, அருஞ்செலவு செய்து பிணிதீர்த்தார். நூல் வேலையினையும் தொடங்கிப் பதிப்பித்து முடித்தார். இவ்வாறாக 1905 ஆம் ஆண்டிலே தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதலாவது பகுதியாகிய பாயிர விருத்தி வெளிவந்தது.

இப்போதுள்ள உடலை நோக்கின் தந்தையுந் தாயு மாயினார்.அத்துரையவர்களே என்று தஞ்சை மாவட்ட மருத்துவர் அக்கீம் துரையவர்களைப் பாராட்டினார் அல்லவா சண்முகனார்! அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்று நிறுவுமாறு கருதினார். அவ்வாறே, தொல்காப்பியச் சண்முகவிருத்தியை நினைவுச் சின்னமாக்கி வாழ்வுதந்த பெருமகனுக்கு அழியா வாழ்வளித்தார்.

சண்முகவிருத்தி வெளிவந்த பின்னர் தலையாய புலவர் சிலர் சண்முகனாரைப் பெருக மதித்துப் போற்றினர். ஆராய்ச்சித் திறத்தைப் பாராட்டினர்; தேடிவந்து பழகினர்; ஆனால் நெஞ்சக் காழ்ப்புடைய சிலர் பேச்சாலும் எழுத்தாலும் தாக்குவதையே தம் கடமையாகக் கொண்டுவிட்டனர். தாக்குவதிலும் அறத்தின் பாற்பட்டு நின்று வாதிக்காமல் வசைபாடுவது ஒன்றே கொண்டனர். புல்லிய சொற்களால் தாக்கித் தம்புன்மை ஒன்றையே நிலையாட்டினர். சண்முகனார். மறுப்புக்கு மறுப்புக்