உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

கூறி வாயடக்கினர். என்றாலும், வெறிகொண்ட அவர்களை அடக்குவது எளிதாக இல்லை. "களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க், குளித்தானைத் தீத்துரீஇ யற்று' என்னும் பொய்யா மொழியின் மெய்நிலை கண்டமையே பயனாயிற்று. நாவலர் பாரதியார் நட்பு

சண்முக விருத்தி வெளிவந்த காலையிலே மாறா அன்புக்கு ஆட்பட்டவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஒரு பெரு நாவலர். அவர் கணக்காயர், டாக்டர் ச. சோமசுந்தரபாரதியார் ஆவர். நாவலர் தூத்துக்குடியிலிருந்து செட்டிநாட்டுப் பகுதிக்கு வழக்குத் தொழில் காரணமாகப் போவதுண்டு. அப்பொழுது களிலெல்லாம் மதுரையில் தங்க நேரின், தமிழ்ச் சங்கம் சென்று புலவர் பெரு மக்களுடன் உவந்து அளவளாவுவார். அச் சமயங்களிலேயே நம் சண்முகனாரின் அறிவாராய்ச்சித் திறங்களிலே ஈடுபட்டு இன்புற்றதுண்டு. ஆங்கில மொழி வல்லுநரும், தமிழ்ப புலவரும், வழக்கறிஞருமான பாரதியார் அன்பிலே தம்மை மறந்து ஒன்றி நிலைத்ததும் உண்டு.

நாவலர் பாரதியாரும் சண்முகனாரும் முதன்முதல், சங்கத்தில் நூல் பரிசோதகராகவும், நூல்வெளியீட்டாளராகவும் இருந்த மு.ரா. கந்தசாமிக் கவிராயர் வீட்டிலே சந்தித்தனர். கவிராயர் குடும்பம் தமிழ்ப் புலமையில் தலையோங்கி நின்ற குடும்பமாகும். வாழையடி வாழையாகப் புலமைச் செல்வர் எழுவர் பிறந்து திகழ்ந்தோங்கிய குடும்பம் அது. இக்குடும்பத்தினர் பேரன்புக்கு உரியவராக இருந்தது சண்முகனார் புலமைநிறை விற்கோர் துணை எனலாம். கவிராயர் வீட்டிலே சண்முகனாரைந் சந்தித்தது குறித்து நாவலர் எழுதுகின்றார்.

'மு. ரா. கந்தசாமிக் கவிராயர் என்பவர் ஆசுகவி; மதுரமான கவிகளை உண்டுபண்ணும் ஆற்றல் உடையவர். மதுரையிலுள்ள அவர் வீட்டிலே ஓர் ஆசிரியரைக் கண்டேன். அவரே அரசஞ் சண்முகனார். அவருடன் உரையாடியபோது என் வாயிலிருந்து தொல்காப்பிய நூற்பாக்களும் வெளிவந்தன. இதுகண்ட ஆசிரியர் சண்முகனார் என்னைப் பார்த்து, 'இந்தக் காலத்திலே ஆங்கிலம் படித்த வழக்கறிஞர்' கூடத் தமிழில் விருப்பமுடையவராக இருப்பது வியத்தற் குரியதே என்றார். அன்றுமுதல் அவருடன் தொடர்பு கொள்ளலானேன். அவர் மிகவும் அழுக்கு வேட்டியுடன்

1. திருக்குறள், 929.