உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

29

திண்ணையில் படுத்துக் கொண்டிருப்பார். அவருடன் பேசுவேன்; இலக்கண இலக்கியங்களை நன்றாக என்னிடம் எடுத்துக் கொட்டுவார். பணத்தை மதியாது இருப்பார். பணத்திற்காக யாரையும் மதிக்கமாட்டார். அவரது நிலையைக் கண்டால் வித்துவான் என்று அவரைச் சொல்ல முடியாது. அவரது மதி நுட்பத்தையும் பண்பையும் எடைபோட்டால் எது பெரியது என்று கூறமுடியாது. வெள்ளை உள்ளம் உடையவர். மதிநுட்பத்தையும் பண்பையும் எடைபோட்டால் எது பெரியது என்று கூறமுடியாது. வெள்ளை உள்ளம் உடையவர். மதிநுட்பத்தோடு தொல்காப்பிய நூற்பாக்களைக் கற்ற பெரியார். வரையறையின்றி எல்லோருடனும் குழந்தைபோலப் பேசிப்பழகுவார். அன்பே உருவாகக் கொண்ட அவரிடம் வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் பழகி மகிழ்வேன்.”

சண்முகனாரை, 'இலக்கணக் கடலனார் சண்முகனார்’ என்றும், 'நுண் மதி நாவலர் சண்முகம் பிள்ளை' என்றும் வாய்ப்புழி எல்லாம் நாவலர் உரைப்பது வழக்கம். நாவலர், மறந்தும் புனைந்துரை கூற அறியாதவர்; அவர்பாராட்டுப் பெற்றமை சண்முகனார் உண்மைப் பண்பாலும், நுண்ணிய திறத்தாலும் அன்றி வேறொன்றால் அன்றாம். சண்முகனாரது தொல்காப்பியப் புத்துரைகண்டு உள்ளம் உவந்து நேரடியாகப் பாராட்டுத் தெரிவித்த தொல்காப்பியப் புலமையாளர்களுள் தலையாயவர் நாவலரே எனின் மிகையன்று. பின்னை நாளில் சண்முகனாரைப்போலவே, நாவலர்தாமும் தொல்காப்பியப் பொருட்படலத்திற் சில இயல்களுக்குப் புத்துரை கண்டமையும் குறிப்பிடத் தக்கது.

தொல்காப்பியப் பேராசான்

இருமொழிப் பெரும்புலவராக விளங்கிய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் சண்முகனாரைத் தம் இலக்கணப் பேராசிரியராகக் கொண்டார். தொல்காப்பியப் பாடங் கேட்டார். ஆராய்ச்சி செய்தார். சண்முகனார்க்குப் பண்டித மணியின் நுண்ணறிவும் கூர்த்த மதியும் இன்பம் பயப்பனவாயின. மாணவ நிலையிற் கொள்ளாது நண்பரெனக் கொண்டார். வடமொழி தென்மொழிப்புலமையையும் இலக்கிய ஆராய்ச்சி வன்மையையுங் கருதி, 'மகாவித்துவான் கதிரேசச் செட்டியார்' என்று சண்முகனார் குறிப்பிட்டார். மாணவ நிலையில் வந்தோரின்