உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

31

சண்முகனார், முன்னவர் பின்னவர் என்று காலவேறுபாடு கொண்டு புலவர்களை மதித்தலை அறியாதவர். 'புலமை' ஒன்றே புலவரை மதித்தற்குரிய அளவுகோல் ஆகும். அன்றிக் காலம் ஆகமுடியாது" என்னும் தெளிவு கொண்டவர். இதனைத் தெளிய அறியாத சிலருக்குச், சண்முகனார், "புலவரை மதித்தலை அறியாதவர் என்னுங் கருத்து நிறைந்திருந்தது. அதுமறைந் தொழியுமாறு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழா 26-5-1906 இல் உ.வே. சாமிநாதையர் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது மறைமலையடிகளார் தாம் எழுதிய பட்டினப் பாலைப் புத்துரையைப்பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். இதன்பின் தம்மை அழைக்காதிருந்தும் கூடச் சண்முகனார் எழுந்து சென்று அடிகள் பேச்சின் மாண்பையும் உரைச் சிறப்பையும் உள்ளது உள்ளவாறு புகழ்ந்து பாராட்டினார். உண்மைப் புலமைக்குத் தலைவணங்காதவன் புலவன் அல்லன்; போலிப் புலமைக்குத் தலைவணங்குபவனும் புலவன் அல்லன் என்று உரத்த கையொலிக் கிடையே தம் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் குறைகூறி வந்த சில புலவர்கள் வாயடங்கிப் பேயினர். குற்றம் கூறுதலே குறி என்று கொண்டு விட்டால் குற்றம் கூறவாமுடியாது?

வள்ளல் சண்முகனார்

கல்விச் செல்வம் கடல்போல் பெருக்கிக் கொண்டிருந்த சண்முகனார்க்குப் பொருட் செல்வம் சிற்றூற்றாகக் கூடத் தோன்றிற்றில்லை. இந்நாளில் அவர்பட்ட பொருள் முட்டுப் பாட்டை நினைய நெஞ்சம் நடுங்கும்; எழுதக்கை நடுங்கும்; சொல்லவோ வாய் நடுங்கும்; ஆனால், "புலவன் வறுமை மற்றையோர் வறுமை போலல்லாது பிறர்க்கு இன்பம் பயக்கும் நற்செயலையும் செய்து விடுகின்றது." என்பதையும் மறக்க இயலவில்லை.

1906 ஆம் ஆண்டு மேத்திங்கள் இருபத்து நான்காம் நாள் சேதுபதி உயர்நிலைப்பள்ளியின் விக்டோரியா மண்டபத்தில் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாத்தலைவர் உ.வே.சாமிநாதையர் தம்தலைமையுரையின் போது, "மதுரை வாசியாய்த் தமிழ்க் கடலுண்டு அரியபெரிய உரைகள் எழுதி அழியாப் புகழ் நிறுவிய ஆசிரியர் நச்சினார்க் கினியரது உபகாரத்தைக் குறிக்கத்க்க ஓர் அடையாளம் இந்நகரில் அமைக்கப்பட வேண்டும். அதற்குப் புலவர், பெருமக்களும்,