உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

செல்வப் பெருமக்களும் சங்கப் புரவலர் பாண்டித் துரைத்தேவர் அவர்கட்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவர்உரைக்குப்பின், ஆங்கெழுந்தருளியிருந்த பெருஞ் செல்வரும்நல்லுளம் உடையவருமான அரித்து வார மங்கலம், இரகுநாதராசாளி யாரவர்கள் ரூபா 50 நன்கொடை புரிந்தார்கள். வேறு சிலரும் நன்கொடை புரிந்தனர். ரூபா 119 அவ்விடத்திலேயே கைவந்து சேர்ந்தது. ஆங்கிருந்தவர்களுள் உயர் கொடையாளர் எவர்தெரியுமா? அவர்நம் சண்முகனாரே! வறுமைப்புலவரா வள்ளல்ஆனார்! ஆம்! பெருஞ்சித்திரனார் வள்ளல் ஆகவில்லையா! உள்ளம் உடைமை வள்ளன்மை; உள்ளம் இன்மை வறுமை!

என்ன கொடை கொடுத்தார் சண்முகனார்? பணத்திற்கு எங்கே போவார்? “சந்ததம் தரித்திர ராசனை வணங்கும்" அவர், பையிலே பணமா வைத்திருந்தார்? அரசப்பர் தம்மகனுக்குப் போட்டிருந்தார்தங்க வளையல். அது விற்பனைக் கடைக்குப் போகும் நிலையை அதுவரை அடையாது காத்துக்கிடந்திருக்கிறது வள்ளல்சிறப்பினைச் சண்முகனார்க்கு வழங்குவதற்காக! தலைவர் உரைவெளி வந்தவுடனே சண்முகனார் வளையலைக் கழற்றினார். மனமுவந்து அளித்தார்! பயன் என்ன? நச்சினார்க்கினியர் நூலகம் சங்கத்தில் உருவாகியது. சண்முகனார் பொருளால் பெருவாழ்வு வாழ்ந்தார் அல்லர். பொருள்வளம் அவர் பெற்றிருந்தால் அவ்வளம் எவ்வெவ் வறங்களாய்த் தலை நின்றிருக்குமோ?

வாட்டும் வறுமை

இந்நிகழ்ச்சி நடைபெற்று ஏழுதிங்கள் அகன்றது.18-12-1906 இல் தம் கெழுதகை அன்பர் பண்டிதமணிக்குச் சோழவந்தானி லிருந்து கடிதம் ஒன்று எழுதினார். அதனை நோக்கின் சண்முகனார் கொடைக்கு நிகர் அதுவே என்பது புலனாகும்.

சோழவந்தான்

18-12-06

அன்புருவாய நண்பரவர்கள் சமூகத்துக்கு வந்தனம். உபய குசலோபரி; இருபாலும் நலனே விளைக. தங்களை விட்டு நீங்கி இவ்விடம் வந்தபின் கார்த்திகை 15ஆம் தேதி வரை சில காரணங்களால் திண்டுக்கல் முதலாய சில விடத்துக் கடிதப்போக்கு வரத்தின்றியும் பிறரறியாதும்

1. செந்தமிழ் தொகுதி, 5, பகுதி, 8.