உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

33

வசிக்க நேர்ந்தது. அதனால் தங்களுக்கும் ஏனை யோருக்கும் கடிதம் எழுதுதல் தடையுற்றது.

கனம், பொருளாளர் (டிரசரர்) அவர்கள் மூன்று கடிதம் எழுதியும் என்கைக் கெட்டாது பின் இவ்வூர் அஞ்சலதிகாரி (போஸ்ட் மாஸ்டர்) அவர்களால் கேள்வியுற்றுச் சென்ற வாரம் கடிதம் எழுதினேன். இன்று அவர்கள் கடிதம் நேரிலும் பெற்றேன்.

அவர்கள் கட்டளைப்படி டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளி இவணின்று பிரயாணமாய் மேலூர் மார்க்கம் வருவேன். வந்தால் ஞாயிறு அல்லது திங்கள் மகிபாலன்பட்டியில் தங்களைக் கண்டபின் யாமிருவேமும் கனம் பொருளாளர் அவர்கள் பாற் செல்ல உத்தேசம். தாங்கள் ஞாயிறு திங்கள் செவ்வாய் மாலைவரை ஊரிலிருக்கும்படி பிரார்த்திருக்கிறேன்.

இனி, என் வரலாறு சிறிது கூறுவல்:

சுயோதனன் என்னுங் கடனால் ஊக்கமெனும் நாடு இழந்து, சஞ்சலம் என்னும் காட்டில், மதியென்னும் பாஞ்சாலியொடு, பொறியென்னும் பஞ்சவர் கூட்ட மாகிய யான் அலைந்து திரிந்தமை தாங்களும் அறிந்ததொன்றே. இவ்வாறு நிகழ்தலைத் தங்களைப் பரிந்து இங்குற்றபின் ஐப்பசி முதற் கரந்துறைவும் நேரத் திண்டுக்கல் என்னும் விராட நகரத்து ஒரு மகமதியக் கனவானிடந் தங்கி அக்கனவானுக்கு ஏக்கர் 5 உள்ள நன்செயை ரூ.3058க்குக் கிரயஞ் செய்து, வேறுசில நன்செயை ரூ.2000க்கு ஒத்தி வைத்துப் பத்திரம் எழுதிக் கரந்துறை விடுத்து வெளிப்பட்டுப் பின் கார்த்திகை முதல் தேதி முதல் 15தேதி வரை உத்தியோக பருவமும் நடத்தினேன். இப்போது 18 நாட்போரும் முடிந்தது. சுயோதனனும் துடைமுறிந்து வீழ்ந்தான். இன்னும் உயிர் போகவில்லை. சீக்கிரம் போம் (ரூ.5000 வரை கடன் தீர்த்தும் இன்னும் ரூ 800 ருத்தலால் இவ்வாறு உருவகப் படுத்தினேன்) போயபின் நூலாராய்ச்சி என்னும் முடிசூட்டும் நடக்கும். நடந்தால் ஊக்க நாட்டாட்சியில் தொல்காப்பியப் பயிர் தழைத் தோங்குதலும் உண்மையே. பிற நேரில்.

அன்பன், அ. சண்முகன்