உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

வளையல் கொடையையும், வறுமைக் கடிதத்தையும் இணைத்து நோக்கிப் பார்ப்பவர்கள் மனத்தில் முல்லைக்குத் தேரீந்த முதிர்வள்ளல் பாரியும், மயிலுக்குப் போர்வையளித்த மாண்புப் பேகனும் தோன்றாமல் போகார்.

பாண்டுவுக்குத் தருமன் முதல் ஐவரும், திருதராட்டிரனுக்குத் துரியன் முதல் நூற்றுவரும் புதல்வராகத் தோன்றி, சூதாட்டத்தின் காரணத்தால் நாடு நகரிழந்து, பாண்டவர் பாஞ்சாலியுடன் காடுசென்று பன்னீராண்டுகள் வாழ்ந்ததும், ஓராண்டுக் காலம் எவரும் அறியாமல் விராடநகரில் கரந்துறை வாழ்வு செய்ததும், பின்னர்ப் போர் தொடங்கி அது பதினெட்டு நாள்கள் நடைபெற்றுத் துரியன் முதலாயோர் களத்திடை வீழ்ந்துபட்டதும், பாண்டவர் வென்று முடிசூடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் நாடு நலம் பெற்றதும் ஆகிய வரலாறு எவரும் அறிந்ததே. இக்கதையையே தம் வரலாற்றுடன் இணைத்துக் கற்பித்து விட்டார் சண்முகனார். வறுமையையும் வளமாக மாற்றுவது கற்பனையின் விளைவால் தோன்றிய கலைதானே!

அன்பர்க்கு உதவுவதே கடனாகக் கொண்ட பண்டிதமணி பலகாலும் உதவினார். அவ்வுதவியால் சண்முகனாரால் பாடு புகழும் பெற்றார்.

“கல்விதனம் மிக்க திரேச னாம்வணிகன்

ויי

வல்விதனம் எற்கொழித்தான் வள்ளுவரே”

என்று புகழ்ந்து பாடப்பெறும் சிறப்பென்ன எல்லோருக்கும் எளிதில்கிடைக்கக் கூடியதா?

ஈழத்திற்குப் பயணம்

சண்முகனார்தமிழ்ப்புலமை ஈழம் வரைக்கும் பரவிச் சென்றது. அதனால், இவரை அழைத்துச் சிறப்பிக்கவும், பயன் பெறவும் யாழ்ப்பாணம் வாழ் செந்தமிழ் அன்பர்கள் விரும்பினர்.

ஈழம் வரும் சண்முகனாரை வரவேற்பதற்காகப் பல ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தனர். புகைவண்டி நிலையத்திலேயே வரவேற்புச் செய்வதற்கும், மாலைகள் அணிவிப்பதற்குமாகப் பெரியோர்சிலர் சென்றிருந்தனர். சண்முகனார்வருவதாக இருந்த வண்டி வந்து சேர்ந்தது. ஆனால் கண்முகனாரை எவரும் கண்டாரல்லர். சண்முகனார் வண்டியை விட்டுக் கீழே இறங்கி எவரையும் எதிர்பார்க்காமல் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு நடந்து பேய்விட்டார். வரவேற்க வந்தவர்கள்