உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

35

நெடுநேரம் காத்திருந்து விட்டு வரவில்லை போலும் என்னும் ஏமாற்றத்துடன் சோர்ந்துபோய், அடுத்த வண்டியை எதிர் நோக்கியிருந்தனர்.

கூட்டத்திற்குள் நுழைந்துபோய்ச் சண்முகனார், ஓரிடத்தே உட்கார்ந்து கொண்டார். அவரை முன்பு கண்டறிந்தவர் எவரும் அங்கு இல்லை. எனினும் சண்முகனாரைநன்கு கேள்விப்பட்டிருந்த ஒருவருக்கு, "இவர் சண்முகனாராக இருக்கலாமோ" என்னும் ஐயம் உண்டாயிற்று. அதனால் அடுத்துச் சென்று வணக்கம் செலுத்தி, "ஐயா தங்களுக்கு எந்த வூர்?" என்று வினாவினார். "யாமதுரையோம்" என்றார் சண்முகனார். யாம் அது உரையோம்' என்றும், யாம் மதுரையோம் என்றும் இரு பொருள்படும் சொற்சிறப்பை அறிந்தவரான அப்புலவர் இவரே சண்முகனார் என்று அறிந்து கொண்டு, வரவேற்க நின்றுகொண்டு இருப்பவர் களை அழைத்துவர ஏற்பாடு செய்தார். சண்முகனாரின் அடக்கமான பண்பு அவையோரை வியப்பில் ஆழ்த்தியது.

தமிழ் வளர்ச்சி, புதுமுறை ஆய்வு ஆகியன பற்றி விரிவுரை ஆற்றினார். மறுத்துரைக்க முடியாத அளவு மாண்புடையதாக இருந்தது சொற்பொழிவு. அதனால் அறிஞர் பலர் உளமுவந்து பாராட்டினர். முன்னரே இவர்தம் ஆராய்ச்சியுரைகளைப் படித்து, வெறுப்புக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களும் அவையில் இருந்தனர். அவர்களுக்கு இவர்பேச்சு வெதும்புதலை எழுப்பிற்று. ஆனால்முறையொடு வாதிடவும் முடியவில்லை. அமைதியாக இருந்து ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. அதனால் இங்கும் அங்கும் நடந்தும் கூச்சல் எழுப்பியும், விசிறியும் தமது வெறுப்பைக் காட்டினர். அவர்கள் உள்ள நிலையைத் தெள்ளிதின் உணர்ந்த சண்முகனார், 'இது போலிப் புலமையின் அறிகுறி; அவைக்குரிய நெறிமுறை தெரிவிப்பது தவறாகாது' என்று தம் சொற்பொழிவில் பல இடங்களில் சிலேடையாகச் சுட்டிக் காட்டிக் கொண்டு வந்தார்.

விசிறிக் கொண்டிருந்த ஒருவருக்குப் படவேண்டுமென்று, 'கல்விக்கிரகத்திற்கு வியர்க்குமா?" என்று கேட்டார். கல்விக் கிரகம் (கல்விக்கு இருப்பிடம்) கல்விக்கிரகம் (கற்சிலை) என்று இச் சொற்றொடர் இருபொருளாகி நகையாக்கியது. “ஆடவல்லான் அவை அமர்ந்தான்" என்று இருபொருள் பெறக் கூறி, ஆடி அசைந்து நடைபோட்டிருந்தவர்க்குச் சூடு வைத்தார். அமைதி

1. வள்ளுவர் நேரிசை