உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

கொண்டது அவை. ஆனால் அவர்கள் வெளியே சென்று சண்முகனாரைப் பற்றி 'வாளா' பறையறைந்து திரிந்தனர். இப் பழிவழிக் கூட்டத்திற்குத் தலைவராக இருந்தவர் அம்பலவாண நாவலர் என்பவர் ஆவர். அவர் நல்லபுலமையாளர்; சிவனடியார்; சிந்தனையாளர்; ஆனால், ஒருப்போக்குடையவர், தவறாகவோ சரியாகவோ ஒரு கருத்து அவருக்குப் பட்டுவிட்டது என்றால் அவ்வளவுதான் - அதனை ஒருநாளும் மாற்றிக் கொள்ளார். சண்முகனார் பழைய உரையாசிரியர்கள் கருத்தை மறுத்துத் தொல்காப்பியம் திருக்குறள் இவற்றுக்கு உரைகண்டார் அல்லவா! "பழம்பெரும் ஆசிரியர்களைக் குற்றங்கூற இவர்யார்? அவர்களைக் குற்றங்கூறும் இவருக்கென்ன பெருமை தருவது" என்று கருத்துக் கொண்டு விட்டார். முன்னவர் உரையையும், பின்னவர் உரையையும் கண்டு உண்மை காணலன்றோ நேர்மை. வெறியிலே இறங்கியபின் நேர்மைக்கு இடமிருக்குமா?