உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புலவர்மணி சண்முகனார்

ஈழப் பயணத்திற்குப் பின்னும் உரைத் தகராறு ஓய்ந்தபாடில்லை. நன்றாக முற்றியது. தொல்காப்பியச் சண்முக விருத்தி 1905 ஆம் ஆண்டு வெளிவந்தது அல்லவா! அன்று தொட்டு மறுத்து வந்த அம்பலவாண நாவலரும், அவர் வயப்பட்டோரும் 80 திங்கள் காலம் ஆராய்ந்து அதன்பின் 1912 ஆம் ஆண்டிலே மறுப்புரை விடுத்தனர். இதற்கு மறுப்பு விடுப்பது சண்முகனார் கடமையாயிற்று. நேரிய மறுப்பெனக் கருதிய வற்றிற்கு நேரிய விடையளித்துச் சாதித்தார். பொறாமை வயப்பட்டெழுந்தபோலியுரையை வாக்கு வன்மையால் தாக்கினார்; புல்லிய உரைகளை எள்ளி நகையாடினார்.

மறுப்பும் மறுப்புக்கு மறுப்பும்

66

"அரசஞ் சண்முக விருத்தி அனுபவத்தீ பிரதிபத்தி முதற்பாகம்" என்னுந் தலைப்பில் அம்பலவாண நாவலர் மறுப்புரை எழுதினார். அதற்கு “அம்பல வாண நாவலர் போலியுரை மறுப்பு" என்னுந் தலைப்பில் நாவலர் மறுப்பு வெளிவந்த ஏழே நாள்களில் எதிர்மறுப்பு விடுத்தார் சண்முகனார்.

66

"மதுரை, திருஞான சம்பந்த சுவாமிகள் சந்நிதானத்தில் திருவுளக் குறிப்பின் வழி இதனை அச்சிடப் பெற்றது" என்று தொடங்கியிருந்தார் நாவலர். "சந்நிதானத்தின்' என்பது ‘சந்நிதானத்தில்" என்றாகி இருக்கும் குற்றத்தை எடுத்துக் காட்டியதுடன், மதுரைமகா சந்நிதானத்திற்கும் கடிதம் எழுதி, "தங்கள் திருவுளக் கருத்தின்படி இது வெளியிடப் பெற்றதா?" என்று கேட்டார். "யாம் அக்கருத்துகள் அனைத்திற்கும் உடன்படேம்; ஆயினும்,மறுப்புரை வெளிவந்துளதை அறிவோம்" என்று ஏற்றும் ஏற்காமலுமாய்ப் பதிலெழுதி ஓய்ந்தார். அதன்பின் நாவலரது மறுதலைக் கடாக்களுக்குரிய விடைகளை விரித்தெழுதினார்.

பாயிர விருத்தியில், "கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாப் போலப் பருப்பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல்இனிது விளங்கும்" என்று கூறி,