உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

'பாயிரத்திற்குக் கொழு உவமம்; கொழு துன்னூசி நுழைதற்கு வழியாக்கலுடைத்து; பாயிரம் நூல் நுழைதற்கு வழியாக் கலுடைத்து என்று விளக்கி, கொழு வென்பது ஊசித் தொளையின் மேலுள்ள கோலினை? துன்னூசி என்பது தைத்தல் தொழில் செய்யும் நூல்கோத்த தொளையையுடைய ஊசியின் காதினை. கொழுவுதலால்கோல் கொழுவெனப் பட்டது என்று விரித்தெழு தியிருந்தார். இதனை மறுக்கும் நாவலர் செருப்புத் தொழிலில் கைதேர்ந்த சீமான் அரசஞ் சண்முகனார்" என்று எள்ளி நகையாடியிருந்தார். இதற்குப் பதிலுரைக்க வேண்டுமல்லவா!

"கொழு துன்னூசியினும் பரியது; துன்னூசி கொழுவினும் சிறியது; கொழு மரப்பிடியுடைத்து' என்று வடிவு விளக்கம் செய்து "செம்மார்பாற் சென்று நல்லன கூறிக் கேட்கு மாற்றிற் கேட்பின் அவர்மனமிரங்கித் தம் தையலைக் கொண்டு விளக்கு மாற்றின் விளக்கி ஐயமகற்றி மெய்ப்படக் காட்டி விடுவர். ஆங்குச் செல்க” என்று எள்ளி நகைத்தார். இம்மறுப்பில் தையல் (மனவிை, தைத்தல் தொழில்) விளக்குமாறு (துடைப்பம், விளக்கத் தக்கமுறை) மெய்ப்பட (உடலில்பட, மெய்யாகத் தெளிய) என்னுஞ் சொற்கள் இருபொருட்டாகி இகழ்பட நிற்கின்றவாம்.

நாவலர்தம் மறப்பில், "அது மெய்யுரையா? என்று கேட்க வேண்டியதை "அஃது மெய்யுரையா? என்றும் "இஃதென் கொலோ" என்று கூற வேண்டியதை, இதென்கொலோ என்றும் எழுதியிருந்தார். இதனைச் சண்முகனார்பதப்புணர்ச்சி செய்ய விரும்பிச் சந்தி தெரியாது புகுந்து தடுமாறும் இந்த அம்பலவாணரா முதனூலாய தொல்காப்பிய விவகாரத்தைப் பேசத்தக்கார். அந்தோ பரிதாபம்! தாம் கொண்ட வசைமொழிப் புலமையைத் தாளம் விடாது பாடுகின்றார். வசைமொழிக் குப்பையை வாரி இறைக்கின்றார். அம்மம்ம! இவர் நடிப்பிருந்தவாறு என்கொலோ? எங்று பதில் விடுத்தார்.

மற்று மோரிடத்தே, "இவ்வாறு எந்தக் கடையன் தான் ஓதுவான்; எந்த மடையன் தான் ஓதுவான்” என்று அம்பலவாணர் எழுதியிருந்தார். அதற்குச் சண்முகனார் 'ஈழத்தார் மதிமயங்கித் தப்பறைகின்றார். இவ்வாறறையுந் தப்பினைக் கல்லரும் மதியார் என்று இடித்துக் காட்டினார்.

நீண்டவோர் வரியினைச் சுட்டிக் காட்டி, "இத்தனை இழுப்புடைய அரசஞ் சண்முகனார்" என்று போலியுரை புகன்றார் அம்பலவாணர். அரசப்பர் மைந்தர், அம்பலவாணர் எழுதிய ஓர்