உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

39

வரியினைச் சுட்டிக் காட்டி, “ஈழத்தார்க்கு ஏனோ இத்தனை பேரழுப்பு" என்று மாட்டினார்.

'நன்று கூறினாய்" என்று தம் பண்பின்மையை உறுதிப் படுத்தினார் அம்பலவாணர். சண்முகனார் உள்ளங் கொதித்தது. "சீசீ! இத்தகையாருடன் என்ன வாதம்? வென்றாலும் தோற்றாலும் பெருமை இன்றே? கல்லாரோடு வாது செய்து வெற்றி பெறலினும் கற்றாரோடு வாது செய்து தோல்வியுறல் நன்றே" என்று எழுதினார்.

அந்தோ! சண்முகனார் பட்ட துயர் பெரிது. மிக மிகப் பெரிது! "ஒல்காப்புலமைத் தொல்காப்பியத்தை உளங்கொள ஆய்ந்த வளந்திகழ்புலமையர்" என்று பாராட்டிச் சிறப்பிக்க வேண்டியதை விடுத்து பழிதூற்றிக் கொண்டலைந்த இழிதகைமை கழிபேதைமையயோகும். கருத்து என்று தோன்றிற்றோ அன்றேகருத்து வேறுபாடும், மாறுபாடும் தோன்றிற்றாதல் வேண்டும். அதற்காக மனித நிலை மறந்து தாக்குவதும் மறுப்பதும் மனித நிலையாகாது.

அம்பலவாண தேசிகரின் அழைப்பு

சண்முகனார் சைவ சமயத்தவர்; சமய உணர்ச்சியும் மிகுந்தவர். சைவப் பற்றுக் காரணமாகச் சமயப் பெரியவரே மொழிக்கும் பெரியவர்; அவர் தம் மொழிப் புலமை ஒன்றே வழுவற்றது என்று கொள்வாரல்லர். இக்கோட்பாட்டால்பாயிர விருத்தியில் சிவஞான முனிவர் கூற்றுகளை முப்பத்திரண்டு இடங்களில் மறுத்தெழுதினார்.

இதனைக் கண்டு மனங்கவன்றார் திருவாவடுதுறை, குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகர். சிவஞான முனிவர் அவ்வாதீனத் தலைவருள் ஒருவரல்லரோ?

திருவாவடுதுறைக்குச் சண்முகனார் வருமாறு தேசிகரிட மிருந்து அழைப்பு வந்தது. சண்முகனார் உரையை மறுத்து நிறுவ வேண்டும் என்பதே தேசிகர் ஆவல். அழைப்பினை ஏற்றுக்கொண்ட சண்முகனார் ஆவடுதுறை அடைந்தார். விவாதமும் தொடங்கப் பெற்றது. தேசிகரது மறுப்புரைகளுக்கெல்லாம் தகுந்த மறு மொழி கூறித் தங் கொள்கை சரியானதே என நிறுவினார் சண்முகனார். இவர், ஆராய்ச்சிப் பரப்பும் சொல்வன்மையும் தேசிகரைக் கவர்ந்து வயப்படுத்தி விட்டன. அதனால் மன மகிழ்ந்து பகையுணர்ச்சி விடுத்துத் தம் பாராட்டின் அறிகுறியாகப்பட்டாடை