உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

ஒன்றினைப் பரிசாக வழங்கினார். தேசிகர் இவ்வாறு உண்மை யுணர்ந்து சண்முகனாரைப் பெருமைப்படுத்தினாலும் அவரைச் சூழ்ந்திருந்தசிலருக்கு இவர் மீதிருந்த காழ்ப்புக் குறைந்த பாடில்லை. வெல்லும் வகையறியாத அவர்கள் கொல்லுவுஞ் சூழ்ந்தனர். ஆனால் தெளிவு கொண்ட தேசிகர் அவர்களைக் கடிந்துரைத்துப் பேறு பெற்றார். சண்முகனாரையும் சில நாள்கள் திருமடத்தில் தங்கியிருக்குமாறு செய்து அளவளாவி இன்புற்றார்.

அகரம் எதிர்மறைப் பொருட்டு

இவ்வாறிருக்கும் போது ஒருநாள் தேசிகர் சண்முகனாரிடம், 'தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும், தான் தற் புகழ்தல்தகுதி யன்றே' என்றிருக்கத் தாங்கள் ‘அரசஞ் சண்முகன்' என்று வைத்துக் கொண்டது சரியாகுமா? சண்முகனுக்கும் அரசன் என்று பொருள் படுகின்றது, அல்லவா!" என்றார். சண்முகனார் பொறுமையாக, "ஆதீனம், அடியேன் கொண்ட கருத்தை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்; அகரம் எதிர்மறைப் பொருட்டன்றோ" என்று கூறி, ரசஞ் சண்முகன் முருகன், ரசமற்ற (அ+ரசன்) சண்முகன்யான் என்று விளக்கினார். தேசிகர் மகிழ்ந்தார்.பின், அவரிடம் விடை பெற்றுக் கொண்டு ஒரு வண்டியில் பயணமானார்.

ஏழைக்கு இரங்கும் நெஞ்சம்

செல்லும் வழியில் ஒரு பெண்மணி எதிரே வந்தாள். அவள் அரைகுறை யானதும் கிழிவுகளை உடையதுமான சீலையைக் கைகளால் அணைத்துப் பிடித்துக்கொண்டு மானத்தைக் காக்குமாறு திண்டாடுவதைக் கண்ணுற்றார். வண்டியை நிறுத்தித் தம் கழுத்தில் கிடந்ததும் தேசிகரால் வழங்கப்பட்டதுமான விலை மதிப்பு மிக்கபட்டாடையை எடுத்து அப்பெண்ணினிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அவளோ, வாழ்த்துரைக்கவும் வாய்வராது கண்ணீர் வழியக் கைகூப்பி நின்றாள். வறுமையிலும் வள்ளன்மை உள்ளம் படைத்த பெருஞ் சித்திரனார் ஒருவர் மட்டும் தமிழகத்தில் இருந்தார்அல்லர். சண்முகனார்போன்று எத்தனை எத்தனை பேர்கள் வாழ்ந்தார்களோ? தன் வரலாறு எழுதி வைக்காத தமிழகத்தை நினைத்து வேதனை ஏற்படத்தானே செய்கின்றது!

சண்முகனார் ஏழைப் பெண்மணிக்குப் பட்டாடை வழங்கிய செய்தி தேசிகருக்கு எட்டியது. ஏழைக்கு இரங்கிய தன்மைக்காகச் சண்முகனாரைப் பாராட்டினாலும், பரிசுப்