உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

சிகரத்தார்திகழ்மேலைச் சிவபுரிவாழ் பழனியப்பன் சிந்தித் தானே!”

"செந்தமிழும் ஆரியமும் முற்றவுணர் நுண்மதியான் சீர்த்திச் சிந்து

வந்துமிழு மாரி நிகர் வண்மையினான் நற்குணமே

வடிவ மானோன்

சுந்தரஞ்சேர் மகிபால நகர்வாழுங் கதிரேசச் சுமுக னோடு

முந்தவே பலகாலு மாராய்ந்து சபையொன்று முளைப்பித் தானே”

என்று தம் பாடல்கள் இரண்டில் பழனியப்பரையும் பண்டித மணியையும் பாராட்டியுரைத்தார் சண்முகனார். சன்மார்க்க சங்கம் தமிழ் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருப்பதையும், புலவர் கல்லூரி நடத்திவருவதையும் தமிழகம் நன்கறியும். இச் சங்கம் தோற்றுவித்தநாள் முதல் நடைபெற்ற பலவிழாக்களில் சண்முகனார் பங்கு கொண்டார். ஆங்கிருந்து தமிழ்த் தொண்டாற்றிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை முதல், தமிழ்ப் பேரறிஞர் பலர் போற்றுதலுக்கும் அன்புக்கும் ஆட்பட்டார் சண்முகனார்.

இளங்காட்டில் சொற்பொழிவு

தஞ்சை மாவட்ட இளங்காட்டில் 14-4-1912 இல் நற்றமிழ்ச் சங்கத்தின் நிறைவு விழா நடைபெற்றது. சண்முகனார். அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். இவருடன் பண்டித மணி, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள் ஆய பெரும்புலவர் பங்குகொண்டனர். கூட்டங் கூடுவதற்கு முன்னர்ச் சிலர், "நன்னூலே யாயின் குற்றங் கூறித் திரிவது மன்னிக்க முடியாத குற்றமேயாகும். அது நன்னூலா அன்றா என்பதைத் தொல்காப்பியமாய முன்னூலும் நன்னூலாய பின்னூலும் ஆய்ந்தோரே கூறற்குரியர். நன்னூலையும் வரன் முறையாக் கற்றறியார், "நன்னூல் இதுவே என்று தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு ஆடினால் மட்டும் நன்னூல் ஆகிவிடாது" என்று கூறினார். பின், வட்டத்திலும், “நன்னூல் என்னும் இலவம் பஞ்சானது தருக்கம் என்னும் சூறாவளியின் கட்பட்டு நிலை பேறின்றி அலையாடுகின்றது" என்று பேசினார். உண்மை று கூறலொன்றே சண்முகனார் விரும்புவது. மற்றொன்றை அன்று!