உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

தமிழ் லெக்சிகன் ஆசிரியர்

43

சண்முகனார் சங்கக் கலாசாலைப் பணியினின்று உடல்நிலைகாரணமாக விரைவில் ஓய்வு கொண்டார். ஆயினும் அவர் ஆராய்ச்சிக்கு மட்டும் ஓய்வு ஏற்படவில்லை. இயற்கைச் சிந்தனையைத் தடுக்க இயலுமா? சோழவந்தானில் இருந்து கொண்டு அமைதியாகத் தமிழ்த் தொண்டாற்றிவந்தார். இச் சமயத்தே மதுரையில் தமிழ்லெக்சிகன் அகராதி தயாரிக்கும் பணியில்மறைத்திரு. சாண்ட்லர் என்பார் ஈடுபட்டிருந்தார். அவர் சண்முகனார்தமிழறிவு மாண்பினை அறிவார் ஆகலின் லெக்சிகன் ஆசிரியராக நியமித்தார். அகராதி வெளியிடும் பணியில்அயராது பாடுபட்டார் சண்முகனார். எனினும் தொடர்ந்து பணிபுரிய உடல்நிலை இடந்தரவில்லை. என்ன செய்வது? அவ்வேலையையும் விரைவில் விடுத்துச் சோழவந்தானை அடைந்தார்.

தேசிகருக்கு இரங்கல்

சண்முகனாருக்கு அகவை நாற்பத்தாறாகும் போது, இவர்தம் தொடக்க நிலைப் பேராசிரியர் அழகர்சாமி தேசிகருக்கு அகவை எண்பத்தாறாயிற்று. அதுகாறும் கல்வித் தொண்டு புரிந்துவந்த அப்பெருந்தகை இயற்கை எய்தினார். அந்நிகழ்ச்சி சண்முகனாரைப் பெருந் துயரத்தில் ஆழ்த்தியது. ஆசிரியர் மறைவுக்காகக் கசிந்தழுது நொந்தார். புலவன் புலம்பல் பொய்யாய்ப் போகுமா? அரிய கவிகளாய் உருவெடுத்தது.

“திருமாது கேள்வனடி மறவாத சிந்தையன் சிவகங்கை நகரினின்று

திரைகொண்டு மணிமுன்றில் எறிவையை அருகோங்கு

செயசோழ வந்தானிடை

வருமா தவக்குடியில்வருமா தவச்சிறார்

மனத்திரு ளகற்றுகுரவன்

மாநிபுண மேருவேங் கடசாமி செய்தவ வடிவெடுத் தெனவுதித்தோன்

பெருமான் சிதம்பரவி நாயகன் கோயிலமர்

பேசரிய ஞானபானு

பீடுற்ற வடுகர்குல தீபமனை யானெய்து பெயரழகர் சாமியென்போன்

திருமேவும் எமதுகுல வேளாளர் தேவெனச்

சிந்தைவைத் தேத்து தூயான்