உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

திறமாக எண்பதுடன் ஆறாவ தகவையில்

திகழ்முத்தி பெற்றானரோ!"

என்பது ஆசிரயருக்காகச் சண்முகனார் பாடிய கையறுநிலைச் செய்யுட்களுள் ஒன்றாம்.

சவமுகம் பிள்ளை

-

தேசிகருக்குக் கையறு நிலை பாடிய பின் பதின்மூன்று திங்கள் உருண்டன. தம் வீட்டுத் திண்ணையில்சண்முகனார் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது தேடிவந்தது ஒருகடிதம். "வித்துவான் அ. சவமுகம் பிள்ளை, தெற்குத் தெரு, சோழவந்தான்" என்பது முகவரி.சண்முகம் பிள்ளையின் பெயர் சவமுகம் பிள்ளையாக இருந்தது. எழுதத் தெரியாதவர் - அரைகுறைப் படிப்பாளர் எழுதிய கடிதமா? அன்று! அன்று! பாவேந்தராய் இலங்கியோர் பரம்பரையிலே வந்தவரும், ஆராய்ச்சி ஒன்றே தம் தொழிலாகக் கொண்டிருந்தவரும், சண்முகனார் மாட்டு உயிர் நண்புடையராய், மதுரைத் தமிழ்ச் சங்க நூலாய்வாளராய், வெளியீட்டாளராய், விவேக பானு இதழாசிரியராய் இலங்கிய வருமான மு. ரா. கந்தசாமிக் கவிராயர் எழுதியனுப்பிய கடிதம் தான் அது. ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது மெய்யாயிற்று. இல்லையேல் சண்முகம், சவமுகம் ஆகுமா?

கடிதங் கண்ட சண்முகனார் அதிர்ச்சி அடைந்தார். புலவன் உரை பொய்க்காது என்பது அவர் கருத்தாயிற்று. மீண்டும் மீண்டும் முகவரியைப் படித்துக் கொண்டே இன்னுமொரு முறை முகம் வழிக்க வேண்டும் என்று சவரம் செய்வோரிடம் கூறினார். 'ஏனையா! இப்படி, ஒருநாளும் நீங்கள் சொன்னது இல்லையே. என் வேலை திருத்தமாக இல்லையா?" என்று கேட்டார். உன் வேலை திருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதோபார்! இக் கடிதம் எழுதியவர்வேலை திருத்தமாக இல்லை. திருத்தமாக எழுதத்தெரியாதவரும் அல்லர். பின் வர இருப்பதை அறியாமலே அவர் எழுதிவிட்டார். யான் இன்னொரு முறை முகத்தை வழித்துக்கொள்ளுமாறு இருக்கப் போவது இல்லை. நீ இனி என் சவ முகத்திற்குத்தான் வழிக்க வேண்டிவரும். அதனால் இப்பொழுதே இன்னொரு முறை இந்தச் சண்முகத்திற்கு வழித்துவிடு" என்றார்.

வினைஞர் என்னென்னவோ கூறித் தேற்றினார். அறியாதவரா சண்முகனார் - தேற்றிவிட, மீண்டும் முகத்தை வழித்து விட்டுக் கவலையுடன் சென்றார் வினைஞர்.