உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

சுவையான சில நிகழ்ச்சிகள்

49

சண்முகனார் வாழ்வில் நடைபெற்றனவாகச் சில சுவையான நிகழ்ச்சிகள் அறியப்படுகின்றன. அவற்றை இப்பகுதியில்

காணலாம்:

கூலியாளான கூத்து

சண்முகனார் ஓர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு வழிப்போக்கர் வந்து சேர்ந்தார். அவர் சற்றுக் கனமான ஒரு சுமையைக் கொண்டுவந்தார். சண்முகனாரின் எளிய தோற்றத்தைக் கண்டு இந்தச் சுமையை எடுத்துக் கொண்டுவந்தால் கூலி தருகிறேன் என்றார். சண்முகனாரும், சுமக்க முடியாமையால் தான் வழிப்போக்கர் இவ்வாறு கூறுகிறார் என்று கருதினார்.ஆகலின் சுமையை வாங்கிக் கொண்டு நடந்தார். சில கல்தொலைவு நடந்து சென்றபின் சண்முகனார்செல்ல வேண்டிய ஊருக்குரிய வழி பிரிந்தது. “ஐயா, இவ்வழியாக யான் போகவேண்டும்; சுமையை வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கூறி, சுமையை அவரிடம் ஒப்படைத்தார். கூலி எவ்வளவு என்று கேட்டார் வழிப்போக்கர். "வேண்டா வேண்டா" என்று கூறிக் கொண்டு நடந்தார் சண்முகனார். "இப்படியும் ஆள் உண்டா? சுமையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டுக் கூலிவேண்டா என்பதற்கு!" என்று நினைத்துக் கொண்டிருந்தார் வழிப்போக்கர். அப்பொழுது சண்முகனாரை வரவேற்க மாலையும் கையுமாய் ஒரு கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் ஊரில் நடைபெறவிருந்த விழா ஒன்றுக்காகவே சண்முகனார் சென்றார். வந்தவர்கள்

மாலை

போட்டு வாழ்த்தியதுதான்! அதுவரை திகைப்பில் நின்று கொண்டிருந்த வழிப்போக்கர் ஒன்றும் புரியாமல் திண்டாடினார். வந்தவர்களிடம், “இவர் யார்” எனக் கேட்டறிந்து வெட்கினார்; வணக்கம் செலுத்தி மன்னிக்குமாறு கோரினார். மெல்லுள்ளம் படைத்தவரானசண்முகனார், "பிறருக்கு உதவிசெய்வதற்காகவே மனிதன் பிறந்துள்ளான். நீங்கள் கவலைப்படவும், நான் மன்னித்துக் கொள்ளவுமான தவறு எதுவும் நடந்துவிடவில்லை' என்று அவரைத் தேற்றிவைத்து அனுப்பினார். சண்முகனார் பண்புக்கு வேறு சான்று வேண்டுமா?

உயிர் காத்த உபகாரி

சண்முகனாருக்கு நீந்தத்தெரியாது வாழ்நாள் முழுவதுமே நீந்துதலை அறியார். ஒருநாள் வண்டியூர்த் தெப்பக்குளம் என்னும்