உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மாரியம்மன்

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தெப்பக்குளத்தில்

இறங்கினார். பாசி படர்ந்திருந்த படித்துறையில் இவர் அடிவைத்ததும் வழுக்கல் உள்ளுக்குக் கொண்டு போயிற்று. தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கித் திக்குமுக்காடினார். அப்பொழுதுதிரு. சுப்பிரமணிய முதலியார் என்னும் அன்பர்திடுமென் ஓடிவந்து சண்முகனாரை தூக்கினார். வெளியே கொண்டுவந்து தளர்ச்சியை அகற்றினார். அவரை, உயிர்காத்த உபகாரி' என்று வாழ்த்தினார். முன்னரே அன்பராக இருந்த அவர் அன்பு மேலும் வளர்வதாயிற்று. சண்முகனார் வறுமைத்துயருக்கு உதவிவந்த உபகாரிகளுள் அவரும் ஒருவராக வாணாள் முழுமையும் இருந்தார். அவரை ஏகபாத நூற்றந்தாதியில் பாராட்டினார்.

மழைபொழியப் பாடும் காளமேகம்

ஒருநாள் சுப்பிரமணிய முதலியாரும், சண்முகனாரும் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்பொழுது வெப்பம் அதிகமாக இருந்தபடியால் முதலியார், 'பழம் புலவர் களெல்லாம் மழை பொழியப் பாடியுள்ளனரே; நீங்களும் அவ்வாறு செய்யலாமே' என்றார். அதன்படி சண்முகனார் மழைபொழிய வேண்டிப் பாடினார். சிறிதுபொழுதில் மழையும் பொழிந்தது.இப்படி நிகழ்ச்சிகள், காளமேகப் புலவர் வரலாற்றில் மிகுதி அல்லவா!

கூட்டத்தில் குறும்பன்

தஞ்சையில் ஒரு கூட்டத்தில் சண்முகனார் சொற்பெருக் காற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டத்தின் அமைதி குலையும் வண்ணம் ஒரு சிறுவன் ஓடியாடிக் கொண்டிருந்தான். பன்முறை கூறியும் அமைதியடையாத அவனைக் கண்டு வருந்திய சண்முகனார், 'படுவயலே' என்றார். உடனே பையன் படுத்து விட்டான். எழுந்திருக்கவே இல்லை. பின்னர் அவையிலிருந்தோர் உரையால் பையன் நிலைமையை அறிந்த சண்முகனார். 'பாடு பயலே' என்றார். பையன் பழையபடி துள்ளியோடினான்.

துறவி காட்டிய மருந்து

சண்முகனார் நோயில் படுத்திருந்தார். மருந்துகளால் அது தீர்ந்தபாடில்லை. ஒருநாள் துறவியார் ஒருவர் சண்முகனார்முன் தோன்றினார். அவர் இவரை அழைத்துக் கொண்டு நாகமலைக்குச் சென்றார். அங்கே ஒரு மருந்துச் செடியைக் காட்டி, "இதனைப் பறித்து உண்டால் நோய்தீரும்" என்றார். சண்முகனார் குனிந்து மருந்துச் செடியைப் பறித்துக்கொண்டு நிமிர்ந்தார். பெரியவரைக்