உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

51

காணவில்லை; வியப்படைந்தார் வியப்படைந்தார் சண்முகனார். சண்முகனார். வீட்டில் சண்முகனாரைக் காணாது அலறியடித்துத் தேடிக் கொண்டலைந்த உற்றார் உறவினர் தன்னந் தனியராக வந்துகொண்டிருக்கும் சண்முகனாரைக் கண்டு மகிழ்ந்தனர்; நடந்ததைக் கேட்டறிந்து வியப்புற்றனர்.

அவிச்சுவையும் செவிச்சுவையும்

மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் விருந்தொன்று நடைபெற்றது. பெரும்புலவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களுள் நம் சண்முகனாரும் ஒருவர். விருந்துக்கு இலைபோடப் பெற்றது இன்னும் காய்கறிகள் பரிமாறப் பெறவில்லை. புலவர்களுக்குள் ஒருபேச்சு எழுந்தது. அது விருந்து பற்றி ஏதேனும் பாட்டியற்ற வேண்டும் என்பதே. ஒரு புலவர், 'சண்முகனார்பாட்டைத் துவங்கிவைக்கட்டும்" என்று முன்மொழிந்தார். “ஆமாம்! ஆமாம்! அவர் துவங்குவதே சரி" என்று வழிமொழிந்தார் ஒரு புலவர். அவை அமைதியாயிற்று. சண்முகனார் கூறினார்: "விருந்து பரிமாறும் இராமாநுசம், பக்கத்தே வந்து பரிமாறும் போது அவர் பரிமாறும் பண்டங்களுள் ஒன்றன் பெயரைச் சேர்த்து "சங்கொடுவா இராமாநுசம்' என்று முடியுமாறு வெண்பா அமைக்க வேண்டும்.

இராமாநுசம் பரிமாறிக் கொண்டு வந்தார். ஒருவர், “ரசங் கொடுவா ராமாநுசம்" என்று இறுதியடி வர வெண்பாப் பாடினார். மற்றொருவர், "பாயசங் கொடுவா ராமாநுசம் என்றார். வேறொருவர், “அதிரசங் கொடுவா ராமாநுசம்" என்றார். அடுத்துப் பாடவேண்டியவர் சண்முகனார். விருந்துப் பண்டங்களில்ஒன்றைக் குறிக்குமாறு பாட்டு அமைக்க வேண்டும். விருந்தில் 'சம்' வருமாறு "ரசம் "பாயசம்" "அதிரசம்" ஆகிய மூன்று பண்டங்களே இருந்தன. அடி எடுத்துத் தந்தபுலவரே பாடமுடியாதுபோயின் இழுக்கு இல்லையா? வல்லவனுக்குப் புல்லே ஆயுதம் ஆகும்போது புலவனுக்குச் சொல்லா பஞ்சம்? இராமாநுசம் பரிமாறும் பொருளை, "இன்னுங் கொஞ்சங் கொடுவாராமாநுசம்' என்றார். கொஞ்சம் என்பதில் “சம்" வந்து விடுகின்றது! பரிமாறிக் கொண்டிருந்த பண்டத்தை மேலும்போடு என்று பண்டத்தையும் குறிக்கின்றது!" பாடுதற்கு என்னதான் பண்டம் இருக்கிறது. இவர் பாடப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாவலர் அவை "கலீர்" என்று சிரித்தது.வியப்புத் தாங்காமல் அவரவர் உணர்ச்சியைப் பலவகைக் குரல்களாலும் வெளிக்காட்டி வியந்தனர்.