உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சண்முகனார் நூல்கள்

1. திருக்குறள் சண்முக விருத்தி

பெரும் புலவர் அரசஞ் சண்முகனாரின் ஆராய்ச்சி வன்மையைப் புலப்படுத்தும் நூல்களுள் திருக்குறள் சண்முக விருத்தியும் ஒன்றாகும். உரையாசிரியர்கள் திருக்குறள் பாக்களுள் சிலவற்றிற்குப் பொருந்தாவுரை கூறியிருப்பதாகக் கண்டார்: அதன் விளைவாகவே சண்முக விருத்தி எழுந்தது.

'பரிமேலழகர் உரையினைக் காண்டிகையாகக் கொண்டு அவ்வுரையுள் பொருந்தாமை மறுத்து, ஏனையவற்றோடு விரிப்பன விரித்து எழுதப்படுகின்றது' என்று உரை எழுதத் தொடங்குகின்றார்.

"விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

.

என்னுங் குறளில் 'சாவாமருந்து' என்னுந் தொடருக்குச் 'சாவாமைக்குக் காரணமாகிய மருந்து' என்று பரிமேலழகர் கூறிய உரையை மறுத்து, "மருந்து என்றாலே சாவாமைக்குரிய பொருள் தொனித்தலின் சாவா என்ற சொல்லை மருந்து என்னுஞ் சொல்லுக்கு அடையாகக் கொள்ளக் கூடாது" என்று கூறிச் 'சவா' என்னுஞ் சொல்லைச் 'சாவாம்' என்று முற்றாக்கி, 'விருந்தினர் புறத்தே இருக்கத் தான் உண்பது சாவோடு ஒக்கும்' என்று பொருள் கூறுவார்.

"தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்'

என்னுங் குறள்,

99

"தீயவே தீய பயத்தலால் தீயவே தீயினும் அஞ்சப் படும்"

என்றிருத்தல் வேண்டும் எனக் காரணம் கூறி மாற்றுவார். இவ்வாறு திருக்குறளுக்குப் பல்லாற்றானும் பொலிவூட்டும்