உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முன்சீப் வேலை

'உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" - என்பது முதுமொழி. வேதநாயகர் இடையறா உழைப்பாளர். உழைப்புத் திறத்தால், மொழிபெயர்ப்பாளராக இருந்த அவர் முன்சீபாக உயர்வு பெற்றார். அவர்தம் உழைப்பும் உயர்வும் பிறர்க்கு நல்வழி காட்டிகளாம்.

1856ஆம் ஆண்டில் முன்சீப் வேலையில் ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவ்வேலைக்கு அறுபது பேர்கள் போட்டியிட்டனர். அவர்களில் மூவர் தக்கவர் எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். அம்மூவருள் வேதநாயகர்க்கே வேலை கிடைத்தது.

தரங்கம்பாடியில் வேதநாயர் முன்சீபாக அமர்ந்தார்; நேர்மையான நீதிபதியாக விளங்கினார் ; மாவட்ட நீதிபதிகளாக இருந்த ஆங்கிலேயர்களும் பாராட்டும் வண்ணம் திகழ்ந்தார். அவர்களால் துணை நீதிபதி வேலைக்குத் தக்கவர் எனப் பரிந்துரை செய்யப் பெற்றார். வேதநாயகர் நீதிவழங்குவதில் உள்ள செம்மையைக் கண்டு வேறு மன்றங்களில் வழக்கு நடத்தியவர்கள் கூட அவ்வழக்குகளை மாற்றிக்கொண்டு இவரிடம் வந்தனர். வழக்கு விசாரிக்கப்படுவதையும், முடிவு கூறுவதையும் திரளாக மக்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

மாவட்ட நீதிபதியாக நெல்சன் என்பவர் வந்தார். தம் செயலில் நேர்மையை நாடும் வேதநாயகர், அவரைப் போய்ப் பேட்டி கண்டார் அல்லர். ஆனால் ஓடித் தேடிப்போய் ஒன்றுக்குப் பத்தாகத் தூண்டிவிடுபவர் வாய்க்கு வேறு வேலை உண்டா? வேதநாயகர் மேல் வேண்டுமட்டும் பழிகூறினர். நெல்சனுக்கு வெறுப்பு ஏற்படும் வண்ணம் பலப்பல கூறினர். மனமாற்றம் கொண்ட நெல்சன் மாயூரம் மன்றத்தை ஆய்வதற்குத் திடுமென ஒருநாள் வந்தார்.

வேதநாயகர் அப்பொழுது உடல்நலம் குன்றி இருந்தார். ஆதலால் தமக்குக் கீழுள்ளோர் பணிகளை முன்னைப்போல்