உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தணிக்கை செய்யமுடியவில்லை. ஆதலால் அங்கும் இங்கும் சில குறைகளை நெல்சனால் காண முடிந்தது. அவற்றுக்குத் தக்க விளக்கம் தருமாறு கட்டளையிட்டார். வேண்டிய விளக்கங்களை அளித்தும் 'நேரில் தம் சிப்பந்திகளுடன் வர வேண்டும்' என்று மீண்டும் கட்டளையிட்டார் நெல்சன். அதற்கு வேதநாயகர் உடல்நிலை இடம்தரவில்லை. ஆதலால் தம் பணியாட்களை அனுப்பி உண்மை நிலையை உரைக்கச் சொன்னார். அதனை உணராத நெல்சன் சீற்றம் கொண்டார். வேலையில் இருந்து வேதநாயகரை நீக்குமாறு பரிந்துரை செய்தார். இந்நிலையில் ஓய்வுக்கால உதவித்தொகையுடன் வேதநாயகர் தாமே வேலையில் இருந்து நீங்கிக் கொண்டார்.

உதவித் தொகையைத் தடுக்கவும் நெல்சன் முயன்றார். அவ்வளவு சீற்றமும் சிறு குணமும் அவரிடம் மண்டிக் கிடந்தன. ஆனால் மேல் மன்றம் திங்களுக்கு நூறு ரூபாக்கள் உதவித் தொகையாக வழங்கியது. ஓய்வுபெற்ற வேதநாயகர் அதற்குப் பின்னரும் அரிய தமிழ்ப் பணிகள் புரிந்தார். அப்பணிகள் அவர்க்கு அழியாவாழ்வு நல்கின.

வேதநாயகர் அதிகாரிகளின் இழிநிலையை எண்ணி எண்ணித், தாம் வேலையில் இருந்து நீங்கியதற்கு மகிழ்ந்தார்; சிறை வாழ்வு நீங்கியதாக இன்புற்றார்; குறைபல நீங்கியதாகக் களிப்புற்றார்; துன்பங்கள் அனைத்தும் தொலைந்தன என விம்மிதம் அடைந்தார்; இறைவன் அன்பில் என்றும் ஈடுபட்டு இன்னிசை பாடித் திளைத்தார்.

“அண்டப் புரட்டன் அந்தவாதி - அகி லாண்டப் புரட்டன் அப்பா அவன் பிரதிவாதி சண்டப் பிரசண்டன் நியாயவாதி”

எனப்பாடிய அவர்,

"போதும் போதும் உத்தியோக கனமே - இதில் ஏது சுகம் நமக்கு மனமே"

என்று பாடினார்.

வேதநாயகர் உள்ளம் தூயது; நீதியிலே நிலைத்தது; நேர்மைக்குத் தலை வணங்குவது; நேயத்தில் ஊடாடி நிற்பது. அவ் உள்ளத்திற்கு விடுதலை வேட்கை உண்டாவது இயல்பே யாம்!"உள்ளம் உடைமை உடைமை" என்பது வள்ளுவர் வாக்கு.