உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

உரிமை பெற்றுள்ள இக்காலத்தும் கூறுதற்கு இயலாத வற்றை எல்லாம் வேதநாயகர் அந்நாளிலே கூறினார். அயலார் ஆட்சியில் அதிகாரிகளைக் கண்டித்து உரைக்க வேண்டும் ஆனால் எவ்வளவு துணிவு வேண்டும்! இடித்துச் சொல்வதிலும் நயமான முறையைக் கையாண்டார் வேதநாயகர்; தவறியவர் நெஞ்சத்தில் படும் வண்ணம் கேலியும் கிண்டலும் கலக்க இகழ்ந்து எழுதினார்; இசைப் பாட்டாகப் பாடி நாணுமாறு செய்தார்.

பழிப்பது போலப் புகழ்வதும், புகழ்வது போலப் பழிப்பதும் வஞ்சப் புகழ்ச்சி எனப்படும். இவ்வஞ்சப் புகழ்ச்சி சங்ககாலத்தில் அங்கதம் எனப்பட்டது. நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியவர்களைப் பற்றி வேதநாயகர் எழுதியுள்ளவை அனைத்தும் மிக உயர்ந்த அங்கதங்கள் என்று கூறத்தக்கன. வேதநாயகர் தம் எழுத்தாற் றலையும் பண்பாட்டையும் விளக்க வல்லன.

செருக்கு மிக்க அதிகாரி ஒருவனை விவரிக்கின்றார் வேதநாயகர்; "அவன் இருக்கிற இடத்திலே ஈ பறக்கக் கூடாது; எறும்பு ஊரக்கூடாது; குருவி கத்தக்கூடாது; ஒருவரும் பேசக் கூடாது; எப்போதும் நிசப்தமாய் இருக்கவேண்டும். அவனுடைய வீட்டுக்கு எதிரே ஒருவரும் சோடுபோட்டுக் கொண்டு போகக் கூடாது; அங்கவத்திரம் போடக் கூடாது; கைவீசிக் கொண்டு நடக்கக் கூடாது; தாம்பூலம் தரிக்கக்கூடாது; சிங்கத்தின் குகை ஓரத்திலே போகிறவர்கள் பயந்து பதுங்கிக் கொண்டு போகிறது போல இவன் வீட்டுக்கு எதிரே செல்லுகிறவர்களும் நடுங்கிக் கொண்டு அடக்கமாகப் போக வேண்டும்.

"அவன் வெளியே புறப்பட்டால் உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லோரும் எழுந்துவிட வேண்டும்; நடக்கிறவர்கள் எல் லோரும் நின்றுவிட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களுக்கு ஆக்கினைகளும், அபராதங்களும் கிடைக்கும். அவனைக் கண்டவுடனே சோடு போட்டுக் கொண்டிருப்பவர் அவைகளைக் கழற்றுகிற வேகத்தைப் பார்த்தால் அவனை அடிப்பதற்காகவே கழற்றுவதாகத் தோன்றும்"

அதிகார ஆணவத்தை இதனைப் பார்க்கிலும் இடித் துரைத்து அறிவு மூட்ட இயலுமா? உயர் அதிகாரத்திலே இருந்த வேதநாயகர் தொண்டராக வாழ்ந்தார் என்பதற்கு இவ் வெழுத் துக்கள் சான்றாம். "தொண்டர் தம் பெருமை சொல்ல வொண்ணாதே" என்பது ஔவையார் வாக்கு.