உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வழக்கறிஞர் கடமை

வழக்குகளையும் சட்ட நுணுக்கங்களையும் தெளிவாக உணர்ந்து அறத்தைக் காப்பதற்காகக் கடமை புரிய வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள். அவர்கள் பணியோ சமூக நலத்திற்கு மிகமிக வேண்டத்தக்கது.

நாட்டில் கொடுக்கல் வாங்கல், நிலபுல விற்பனை, ஒப்பந்தம் ஆகியன நாள்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றுள் எத்துணையோ மாறுபாடுகளும் தகராறுகளும் உண்டாகின்றன. இவற்றையெல்லாம் அனைவரும் அறிந்து தெளிந்து சட்டமுறைப்படி வழக்காடுவோர், முறைமையை நாடவோ வோ இயலாது. ஆகவே அவற்றுக்குத் துணையாக அமைந்து பாடுபடத் தக்கவர்களே வழக்கறிஞர்கள்.

66

'ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கைத் தாம் ஏற்றுக் கொள்ளுமுன் அது முறைமையானதுதானா என்பதை நன்கு ஆராய்தல் வேண்டும். அறமுறைக்கு மாறான வழக்குகளால் எவ்வளவு வருவாய் வருவதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. வருவாய் ஒன்றே கருதி வழக்கை எடுத்துக் கொள்பவர் அவ்வழக்கைக் கொண்டுவந்த தீயவனினும் தீயவர் ஆவார். 'நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா' -என்பது வழக்குக் கொண்டு வருபவனுக்கு மட்டுமன்றி வழக்காட முன்வரும் வழக்கறிஞர்களுக்கும் உரிய பொது அறமேயாகும்.

"முறைமையான வழக்கு என ஒன்றை எடுத்துக்கொண்ட பின்னரும், அதற்காக எடுத்துக்கொள்ள நேரும் உழைப்பு, வழக்கின் தன்மை, வழக்குக் கொண்டு வருபவனின் பொருள் நிலை ஆகிய இவற்றை எல்லாம் கருதித் தகுதியான பணத்தையே வாங்குதல் வேண்டும். துன்பப்படுகிறவர்களுக்குச் செய்யும் துணை என்னும் பெயரால் அவர்களை மீளா வறுமைக் குழிக்கு ஆளாக்குவது கொடுமை. அளவுக்கு மிஞ்சித் தொகை வாங்குவது அட்டை உறிஞ்சுவது போன்றது என்பதும், சிறு தெய்வங்கள் உயிர்ப்பலி வேண்டுவது போன்றது என்பதும் தேவநாயகர் கருத்து.