உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

"தாம் வழக்காட ஏற்றுக்கொண்ட வழக்கைத் தாமே நடத்தாமல் தமக்காகப் பிறரை வழக்காட விடுக்கும் வழக்கறிஞர்களும் உளர். அவர்கள் செயல் பெருங்கேடு தரும். தம்மால் முடிந்தால் மட்டுமே ஒரு வழக்கை ஏற்க வேண்டுமே அன்றி வரும் வழக்குகளை எல்லாம் பண ஆசையால் வாரிப் போட்டுக் கொண்டு கெடுப்பது கூடாது.

தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழிலேயா வழக்குகள் நடத்தல் வேண்டும்.ஆங்கிலத்தில் நடைபெறுவது கொடுமையானது. இதனை அந்நாளிலேயே வேதநாயகர் கண்டித்தார்.

"தமிழகக் கோர்ட்டுகளிலே தமிழ் வக்கீல்கள் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்திலே வாதிக்கிறார்கள். தேசமொழியும் தமிழ் கோர்ட்டிலே வழங்குகிற மொழியும் தமிழ்; நியாய பாதியும் தமிழர்; வாதிக்கிற வக்கீலும் தமிழர்; கட்சிக்காரர் தமிழர்; எல்லாம் தமிழ் மயமாயிருக்க யாருக்கு உவப்பாக அவர்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை. நியாயாதிபதி அல்லது வக்கீல் ஆங்கிலராய் இருந்தால் ஆங்கிலத்திலே வாதிப்பது நியாயம். தமிழ் நியாயாதிபதி முன் தமிழ் வக்கீல் ஆங்கிலத்தில் வாதிப்பது ஆச்சரியம் அல்லவா! ஆங்கில அதிகாரிகள்கூட தேசமொழியிலே பரீட்சையில் தேறவேண்டும் என்ற ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருக்க தமிழ் வக்கீல்கள் தாய்மொழியைத் தள்ளிவிட்டு அந்நிய மொழியிலே வாதிப்பது அசந்தர்ப்பம் அல்லவா! தமிழ் நன்றாகத் தங்களுக்குப் பேசவராது என்று பெருமை போலச் சொல்லிக்கொள்கிறார்கள். இதனினும் இழிவு வேறொன்றுமில்லை.

"சட்ட நூல்கள் ஆங்கிலத்திலே அமைந்து கிடப்பதாலும் சட்ட நுணுக்கங்களுக்குரிய சரியான பதங்கள் தமிழிலே இல்லாமையாலும் தாங்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்து வதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அது அறியாமையே; உண்மை அல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி ஆராய்ந்தால் பதங்கள் அகப்படாமற் போகா. இரண்டொரு குழுக்குறிகளுக்குத் தமிழ்ச் சொற்கள் இல்லை என்றால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்?

"ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடித்து நீதிவழங்குவது கோர்ட்டார் கடமை; தாய்மொழியிலே கோர்ட்டு நடவடிக்கைகள் நடந்தால் மட்டும் உண்மை வெளியாகுமே