உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

77

அன்றி மக்களுக்குப் புரியாத மொழியிலே நடந்தால் எப்படி உண்மை வெளியாகும்?

சுருங்கச் சொன்னால் தமிழ் நியாயாதிபதி முன் ஆங்கிலத்திலே வாதிக்கிற தமிழ் வக்கீல்கள் தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறார்கள்”

வேதநாயகர் தமிழின்பால் கொண்ட பற்றும். அதன் வளர்ச்சியில் காட்டிய ஊக்கமும் இப்பகுதிகளால் நன்கு விளங்கும். அந்நாளுக்கு மட்டுமன்றி இந்நாளிலும் வேதநாயகர் உரை நூற்றுக்கு நூறு வற்புறுத்தத் தக்க நிலைமையிலேயே உள்ளது என்பதில் ஐயம் சிறிதும் இல்லை!