உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தாய்மொழியும், பிறமொழிகளும்

ஒருவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறக்கும் வரை தொடர்பு உடையது தாய்மொழி. பிறமொழிகள் ஒரு சூழலிலோ ஒரு காலத்திலோ இன்றியமையாது வேண்டியிருக்கும். இவ்விரண்டு வகை மொழிகளையும் ஏற்ற ஏற்ற வகைகளில் பேணுதல் அறிவுடையார் கடமை. அக் கடமை உணர்ச்சியில் தேர்ந்த வேதநாயகர் "தாய்மொழி - பிறமொழி" பற்றித் தம் கருத்துக்களைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

வேதநாயகர் வாழ்ந்த நாளில் கல்வி மொழி குறித்து மூவகைக் கருத்துக்கள் நடமாடின. வைதிக மொழியான வடமொழி அரபு மொழிகட்கு முதன்மை தருதல் வேண்டும் என்பது ஒரு சாரார் கருத்து; ஆங்கில மொழிக்கே அத்தகுதி தருதல் வேண்டும் என்பது மற்றொரு சாரார் கருத்து; தாய்மொழியே முதன்மைக்கு உரியது என்பது இன்னொரு சாரார் உரிமை முழக்கம். ஒவ்வொரு வகைக் கருத்தையும் ஏற்பவரும் மறுப்பவரும் இருந்தனர்.

கல்கத்தாவிலும் காசியிலும் வடமொழிக் கல்லூரிகள் உருவாயின. வங்கத்து இராசாராம் மோகனார் ஆங்கிலமொழியைப் பெரிதும் வரவேற்றுப் போற்றினார்; நாட்டுப்புற மக்கள் இடம் அரபி, வடமொழிகளால் கல்வி பரப்ப இயலாது; ஆங்கிலத்தால் கூடாது; தாய்மொழியால் பரப்புவதுதான் கைகூடும்; அதுவே முறைமையானது என்று வில்கின்சன் என்பவர் கூறினார். சேகூர் என்னும் இடத்தில் கல்லூரி நிறுவித் தம் கருத்தை நிலைநாட்டினார். இவ்வகையால் தாய்மொழிப் பற்றும் ஊக்கமும் கொண்டு பாடுபட்டவர் நம் வேதநாயகர் ஆவார்.

"1"

ஆங்கிலத் திணிப்பின் முதல்வர் மெக்காலே. அவர் ஆதரவால் நாடெங்கும் கல்வி நிலையங்களும் பல்கலைக் கழகங்களும் தோன்றின. 'அறிஞர்க்கு ஆங்கிலம்; அறியார்க்கே தாய்மொழி' -என்னும் முறைகெட்ட கருத்து உருவாகியது. “ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கே ஆவியோ டாக்கையும் விற்றார்" என்னும் நிலைமை உண்டாயது. அக் காலையில்

CC