உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

83

தமிழின் பெருமையை உள்ளது உள்ளவாறே எழுதினார் வேத நாயகர். "வீட்டு மொழியும் தமிழ்; நாட்டு மொழியும் தமிழ்!" என முழங்கினார்; எழுதினார்.

(C

'ஆங்கிலம், பிரெஞ்சு முதலாய ஆட்சி மொழிகளைப் படிக்க வேண்டா என்று நாம் விலக்கவில்லை. சட்டம் ஒழுங்கு அறநெறி ஆய்வை அவற்றிலே இருப்பதால் அவற்றை அறியாமல் எப்படி ஆட்சி செய்ய முடியும்? அறிவை வளர்க்க முடியும்? ஆனால் அன்னை வயிறு எரிய ஆண்டவன் பூசை செய்வது போல் தாய்மொழியை அறவே விடுத்துப் பிறமொழியைப் படிப்பது ஏற்கத்தக்கதன்று" என்று சுட்டிக் காட்டினார்.

"தமிழ் தெரியாது என்பதிலே பெருமைப்பட்டுக் கொள்ளும் சிறுமை இந்நாட்டிலே உளதாயிற்று.தமிழ் புத்தகங்களைத் கையால் தொடுவதைப் பாம்பின் புற்றுக்குள் இடுவதாய் எண்ணுவதாகவும், கன்னித் தமிழைக் கற்பது வேப்பிலை கசாயநீர் குடிப்பது போலவும் கருதுகின்றனர்; இவர்க்கு நாட்டுப் பற்றும் இல்லை; மொழிப் பற்றும் இல்லை; என வருந்தினார்.

66

'ஆங்கிலவரை மதிக்கும் இவர்கள், அவர்கள் தம் தாய்மொழியைப் போற்றுவது கண்டேனும் தம் தாய்மொழியைப் போற்ற வேண்டாமா? என்னே அறியாமை! திருவள்ளுவருடைய குறளை அவர்கள் எப்போதாவது பார்த்திருப்பார்களா? கம்பனுடைய கற்பனையைக் கனவிலும் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப் பார்களா? ஔவையாருடைய நீதி நூல்களைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? என இடித்துரைக்கிறார்.

வேதநாயகர் தமிழ் நெஞ்சம் பெரிது! உயர்ந்தது! இன்று தாய்மொழிமேல் உண்டாகியுள்ள விழிப்புணர்ச்சிக்கு வித் திட்டவர்களுள் வேதநாயகரும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. வாழ்க, 'செயற்கரிய செய்த' பெருமகனார்!