உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வேதநாயகர் செய்த நகர்மன்றத் தொண்டுகள்

மொழி பெயர்ப்பாளர் வேதநாயகர் முன்சீப் வேதநாயகர் ஆனார்; முன்சீப் வேதநாயகர் நகர் மன்றத் தந்தை என்னும் தகுதியில் உயர்ந்தார்; அதுகால் அவர் செய்த பணிகள் பலப்பல; அவற்றைக் காண்போம்.

ஆங்கில அரசினால் நம் நாடு கொண்ட பெறற்கரும் பேறு நகரமைப்பு என்பர். சோழர் காலத்தே குடியுரிமை ஆட்சி தோன்றிச் செழித்திருந்தது. குடவோலை வழியாகத் தேர்ந் தெடுக்கப் பெற்ற ஒழுக்கமும் கட்டுப்பாடும் உடையவரே ஊராட்சி. நகராட்சிப் பொறுப்பேற்றனர் செல்வம் உடையவர் எவரும் எத்தகைய மேற்பதவியும் இன்று பெற்றுவிடலாம். ஆனால், அந்நாளில் அப்பதவியை ஒழுக்கம் இல்லாதவர் ஒட்டவோ எட்டவோ இயலாது. இச் சீர்மை ஒன்றே சோழர் காலக் குடியாட்சிச் செம்மைக்கு எடுத்துக்காட்டாம்.

முன்சீப் வேலையில் இருந்து வேதநாயகர் ஓய்வுற்றார்; நகர் மன்றத்தலைவர் ஆனார். நேரிய நீதிபதியாகத் திகழ்ந்த அவரைப் போன்றவர் நகர் மன்றத் தலைமைப் பொறுப்பில் அமர்வது உண்மையாகவே பெரும் பேறாகும். அதிலும் நகர்மன்றத் தொடக்க நாளில் அத்தகையார் அமைந்து வழிகாட்டிச் செல்வது மிகமிகப் பயனாகும். அத்தகு சிறப்பை மாயூர நகர் மன்றம் பெற்று ஓங்கியது.

"குடும்பத்தலைவன் தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கிறான். ஆயிரம் ஆயிரம் குடும்பங்களுக்குத் தலைவனாயிருக்கிற நகர பிதா ஒரு கணமேனும் சும்மா இருக்கலாமா? சொற்பக் கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்கிறவன் அல்லும் பகலும் உழைக்கிறான். அப்படியானால் அளவில்லாத வருமானங்களையும் ஊதியங்களையும் உரிமை களையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தலைவன் அந்த மக்களுக்காக எவ்வளவு பாடுபடவேண்டும். ஆதலின்