உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

85

தலைவனுடைய நேரமும் புத்தியும் சக்தியும் மக்களுக்குச் சொந்தமே அன்றித் தலைவனுக்குச் சொந்தம் அல்ல" என்று பிரதாப முதலியார் சரித்திரத்திலே எழுதுகிறார் வேதநாயகர். இதற்கு ஏற்பவே நகர்மன்றத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார்.

பல நகர் மன்றங்கள் கடனில் மூழ்கித் தத்தளித்தல் கண்கூடு. வேதநாயகர் நகர் மன்றத்தின் வரவுக்கு ஏற்பச் செலவைத் திட்டமிட்டுச் சரிக்கட்டினார். நடைபாதைகளையும் சாலை களையும் செம்மையாக அமைத்துப் பேணினார்; குருடர் முடவர் ஆகிய உறுப்புக் குறை உடையவர்களுக்கு விடுதிகள் அமைத்து இரந்து திரியும் இழிநிலையைப் போக்கினார்; மருத்துவமனைகள் நிறுவினார்; காசிலாமல் ஏழை எளியவர்கள் மருத்துவம் செய்து நலம் பெறுவதற்கு ஏற்பாடு செய்தார்; பள்ளிகள் தோற்றுவித்தார்; பெண் கல்வியில் பேரூக்கம் காட்டினார்; கல்விக் கூடங்களில் நீதிநெறி கற்கவும், உடற்பயிற்சி செய்யவும் வாய்ப்புக் கண்டார். பொதுமக்கட்கும் உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தை ஊட்டினார்; அதற்காகச் சிலம்பக் கூடங்கள் நிறுவினார்; காற்றோட்டம் வெளிச்சம் முதலாய நலத்துறைகள் அமைந்த வீடுகள் கட்டுதற்கும், திருத்தி அமைத்தற்கும் நடவடிக்கைகள் எடுத்தார். இவ்வாறு தம் இல்லத்தைத் தனித் தன்மையுடன் பேணிக் காக்கும் தந்தையைப் போலவே நகரத்தின் தகைமை வாய்ந்த தந்தையாக வேதநாயகர் விளங்கினார்.

வேதநாயகரைப் பாராட்டுவோர் மிகுந்தனர்; பழிப்பவரும் இல்லாமல் இல்லை. இந் நிலையில் வேதநாயகர் பேசுகிறார்; விசுவாமித்திரர் அண்டங்களைப் புதிதாகச் சிருட்டிக்சு ஆரம்பித்தது போலவே நாங்களும் புதிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம்; விசுவாமித்திரர் நினைத்தபடி முடிக்காமல் இடையிலே தூங்கிவிட்டார். நாங்களோ தூங்காமல் எங்கள் எண்ணங்களைப் பரிபூர்த்தி செய்தோம். எங்களில் பிரதிகூலம் அடைந்தவர்கள் எல்லோரும் எங்களைத் தூசித்தார்கள்; அனுகூலம் பூசித் தார்கள். "நாங்கள் ஒன்றுக்கும் அஞ்சாமல் எங்களுக்குப் பொருத்தமாய்த் தோன்றிய பிரகாரம் நடந்தோம்".

அடைந்தவர்கள்

வேதநாயகர் எவ்வெத் துறைகளில் புகுந்தாரோ அவ்வத் துறைகளில் எல்லாம் பிறர்க்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். மல்லிகைப்பூ எவ்விடத்தில் இருந்தாலும் மணம் பரப்பத் தவறாது அல்லவா!