உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆராய்ச்சி

ஆய்தல் என்பதற்கு ஆராய்தல், காய் முதலியவைகளைப் பிரித்தெடுத்தல், தெரிதல் தெரிந்தெடுத்தல், நுண்மை, முன்னுள்ள தனிற் சிறிதாதல், வருந்துதல், அழகமைதல், அசைதடில், சோதனை செய்தல், கொண்டாடுதல், கொய்தல், காம்பு களைதல்,நுழைந்து பார்த்தல் என்னும் பதினான்கு பொருள்களை அகர முதலிகள் தருகின்றன.

'ஆய்தல்' என்பது, பொதுமக்களும் பெருக்கமாக வழங்கும் வழக்குச் சொல். அவர்கள் நூலாய்தலைச் சுட்டாமல், காய் ஆய்தல், கீரை ஆய்தல் என வழங்குகின்றனர். அவ்வாய்தல் பொருளைச் செவ்விதின் அறிவார், இவ்வாய்தல் பொருளையும் எளிதில் இனிதில் அறிவார்.

காய் ஆய்தல் :

கொத்தவரை என்னும் காயை, ஒடித்தல் அறுத்தல் என்று சொல்லலாமல் ஆய்தல் என்பதே நாட்டுப்புற வழக்கு. காயில் முற்றியது, பூச்சி பிடித்தது, கெட்டுப் போனது என்பவற்றை ஒதுக்கிக், கறிக்குத் தக்க பதனமைந்த காய்களைப் பறிப்பதே ‘ஆய்தல்' என வழங்கப்படுகிறதாம். பறித்தபோது ஆய்ந்தது போலப் பின்னும் ஆய்தல் உண்டு. அவ்வாய்தல், நுனி மூக்கும் அடிக்காம்பும் அகற்றுதல், முதுகு நரம்பு எடுத்தல், அளவிட்டு ஒடித்தல் என்பனவாம். பறிக்கும் போது முற்றல் முதலியன வந்துவிடினும் இவ்விரண்டாம் ஆய்வில் விலக்கப்பட்டு விடும். கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளல் ஆய்வுப் பொருளாதல் புலப்படும்.

கீரை ஆய்தல் :

கீரை ஆய்தல் என்பது பொதுமக்கள் வழக்கே. கீரையுள் ஒருவகை அறுகீரை; அறைக் கீரை என்பது அது. பழுத்த இலை, அழுகல் இலை, பூச்சிபட்ட இலை என்பவற்றை விலக்கி, மாசு தூசு நீக்கி, நரம்பு அகற்றி நல்லன கொள்ளலே கீரை ஆய்தலாம். நாம் கருதும் ஆய்வு, ஆய்தல், ஆராய்தல், ஆராய்ச்சி என்பன