உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ் வளம் - 22 228

வற்றை இவ்வாய்தலொடு பொருந்தக் கண்டு இருவகை வழக்கும் கைகோத்து நடையிடும் தமிழியல் மாட்சியை அறிந்து மகிழலாம்.

ஆய்தல், ஆராய்தல் :

திருக்குறளில் ஓரதிகாரப் பெயர் (80)நட்பு ஆராய்தல் என்பது அதில் வரும் ஒரு குறள் (729) ஆய்தலை அடுக்குகிறது.

66

'ஆய்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்

""

என்பது அது. தூதிலே (69) இரண்டு குறள்கள் அன்ப அறிவு ஆராய்ந்த சொல்வன்மை” (682) "அறிவு உரு ஆராய்நத கல்வி” (684) என்கின்றன. ஆய்தலும் ஆராய்தலும் பெருக வழங்கிய வழக்குச் சொற்கள் வெளிப்படை.

"நாடுதல் என்பதும் ஆய்தல் பொருளே ஆதலால்

குணம் நாடிக் குற்றமும் நாடி" என்றும் (திருக், 504)

“நோய் நாடி நோய்முதல் நாடி” என்றும் (திருக், 948) பெருவழக்காயின.

உண்டோ எனின்

இனி, ஆய்தலுக்கும் வேறுபாடு நுண்ணிதாக உண்டு என்பதாம். 'ஆர்' என்பது அது. ஆர் என்பது அருமைப் பொருளது. ஆய்ந்ததை மேலும் நுணுகி ஆய்தல், ஒருமுறைக்குப் பன்முறையாய் ஆய்தல் ஆராய்தலாம்.

ஆய்வு என்பதற்கு நுண்மைப் பொருள் உண்டோ எனின் எழுத்துகள் அனைத்தினும் நுண்ணிய ஒலியுடைய எழுத்து ஆய்த எழுத்தே என்பதை எழுத்தியல் அறிந்தார் எவரோ அறியார்?

“ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்'

என்பது தொல்காப்பியம் (சொல். உரி. 32)

ஆய்தத்திற்கு ஆஃகன்னா, அஃனேம் என்பவும் பெயர்கள்.

அவற்றிலுள்ள அஃகு என்பது நுண்மை அல்லது நுணுக்கப் பொருள் உடையதாதலை, “அஃகி அகன்ற அறிவு" 'நுண்மாண் நுழைபுலம்' என்னும் குறளாட்சிகளால் (175, 407) தெளியலாம்.